கோவில் கட்டுப்பாடு யார் வசம்?: திருவண்ணாமலையில் இன்று பந்த்
திருவண்ணாமலை:
அருணாச்சலேஸ்வரர் கோவிலை மத்திய தொல்பொருள்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முயல்வதைக்கண்டித்து திருவண்ணாமலையில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடந்தது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலை மத்திய தொல்பொருள் துறைதன் வசம் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து, கோவிலை புணரமைப்பது மற்றும் தேசிய பாரம்பரியச் சின்னமாக மாற்றுவதேமத்தியதொல்பொருள் துறையின் நோக்கம் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜக்மோகன்தெளிவுபடுத்தினார்.
இருப்பினும் தொல்பொருள் துறை திருவண்ணாமலை கோவிலை தன்னகப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்திபோராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் சார்பில் புதன்கிழமை காலை முதல் கடையடைப்பு நடந்து வருகிறது. மாலையில் பொதுக் கூட்டம்நடக்கவுள்ளது. காலையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், பல்துறையினர் அடங்கிய பேரணியும் நடந்தது.
அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழக்கு:
இந் நிலையில் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதைக் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த உயர் மட்டக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இந்தக் கோவில் மாநிலஅரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
-->


