சென்னை விமான நிலையத்துக்கு இன்டர்காமில் வந்த வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னை விமான நிலையம் வந்து சேர இருந்த நேரத்தில் விமான நிலையத்துக்குள்வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்திற்குள் பயன்படுத்தப்படும் இன்டர்காம் மூலம் இந்த மிரட்டல் வந்தது. உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரும்,வெடிகுண்டு நிபுணர்களும் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. ஆனால்,
எந்த குண்டும் சிக்கவில்லை.கடற்படையின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக பெர்னாண்டஸ் சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது இந்தமிரட்டல் வந்தது.
இன்டர்காம் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதால் இதை யார் செய்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள இந்த இன்டர்காம் தொலைபேசிகள் கட்டுப்பாட்டு அறையில்தொடங்கி கேண்டீன் வரை நூற்றுக்கணக்கில் விமான நிலையத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ளன.
இதனால் யார் இந்த மிரட்டலை விடுத்தது என்று தெரியாமல் போலீசார் குழம்பிப் போய் உள்ளனர்.
கடற்படை விழாவில் பெர்னாண்டஸ்:
இந்த பரபரப்புகளுக்கு இடையே மிகுந்த பாதுகாப்புடன் வந்திறங்கிய பெர்னான்டஸ் சென்னையில் கடலோரக் காவல் படையின் வெள்ளிவிழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார். இதையொட்டி கோவளம் கடற்கரையில் 2 நாள் கடல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கையும்துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், கடலில் சிக்கி திசைமாறி தவிப்பவர்களை நாடு, மொழி, இனம் பாராமல் காப்பாற்றும் பணியை கடலோரக் காவல்படையினர் செய்து வருகிறது.
கடல் பகுதியில் செயல்படும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியக் கடல் பகுதியை கண்காணித்து, பாதுகாக்கும் பணியில் 2 செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications