அறக்கட்டளையில் ஜாதி பிரச்சனை: ராமதாஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சென்னை:
கோர்ட் உத்தரவை மீறும் வகையில் நடந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர்ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, போட்டி வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன்ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகத்தை நடத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்துஅந்த நிர்வாகத்தை நடத்துவதற்கு நீதிபதி தங்கமணி தலைமையிலான குழுவை சென்னை உயர்நீதிமன்றம்அமைத்துள்ளது. இந்தக் குழுவில் 8 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் வன்னியர் சமுதாயத்தைச்சேராதவர்கள்.
இந்தக் குழுவின் கூட்டம் அக்டோபர் 4ம் தேதி நடந்தது. அப்போது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள்கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.
நீதிபதி தங்கமணி உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வந்தபோது வன்னியர் அல்லாத உறுப்பினர்களைஉள்ளே நுழைய விட மாட்டோம் என வன்னியர் சங்கம் மற்றும் பாமகவைச் சேர்ந்தவர்கள் தடுத்தனர்.
மேலும் நீதிபதியையும் வன்னியரல்லாத குழு உறுப்பினர்களையும் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தனர்.அடிக்கவும் பாய்ந்தனர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெதீசன் மற்றும் நீதிபதி தினகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்இந்தப் பிரச்சினை விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள்,
குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவது, மிரட்டுவது போன்ற செயல்கள் மூலம் நீதிமன்றத்தையும், நீதியையும்பணிய வைத்துவிட முடியாது என்பதை அவர்கள் (ராமதாஸ் அண்ட் கோ) உணர வேண்டும்.
அறக்கட்டளையின் செயலாளர் இந்தத் தாக்குதல் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் போலீஸ் நிலையத்தில் புகார்கொடுக்க வேண்டும்.
புகாரை ஏற்று அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை 4 வாரங்களுக்குள்உயர்நீதிமன்றத்திடம் போலீசார் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-->


