For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவினரின் நெருக்குதலால் பந்தாடப்பட்ட பெண் கலெக்டர்

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக செல்லமுத்து இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை கலெக்டராக இருந்து சுப்ரியா சாகுஅதிமுகவினரின் நெருக்குதலால் தூக்கி அடிக்கப்பட்டு சமூக நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊட்டியை அழகுபடுத்தவும், அதன் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்களை அமலாக்கி மிகச் சிறந்த மாவட்ட கலெக்டர்என்ற பெயரைப் பெற்றவர் சுப்ரியா. அதே போல எந்த நெருக்குதலுக்கும் பணியாமல் பல நல்ல செயல்களை செய்து வந்தார்.

நீலகிரி முக்கிய மலைப் பகுதியில் நிலத்தை சுட்ட அதிமுகவினரை தட்டிக் கேட்டார். அவர்கள் ஆக்கிரமித்திருந்த நிலத்தை கையகப்படுத்தநடவடிக்கை எடுத்தார். இதனால் கொதித்துப் போன ரத்தத்தின் ரத்தங்கள் மேலிடத்தில் பற்ற வைத்தன.

மேலும் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு காண்ட்ராக்ட் எடுப்பதில் அதிமுகவினரை சுப்ரியா நெருங்கக் கூட விடவில்லை.அவர்களை ஒடுக்கி ஓரம் கட்டினார்.

இதனால் பெரும் பணத்தை இழந்த ஆளும் கட்சியினர் சென்னைக்கு புகார் மீது புகார் அனுப்பினர்.

அதிமுகவினரின் அரசியல் திருவிளையாடலால் சுப்ரியா தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். ஒரு நல்ல கலெக்டரை நீலகிரி மாவட்ட மக்கள்இழந்துள்ளனர்.

இப்போது கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள செல்லமுத்து சென்னையில் செய்தித்துறை இயக்குனராக இருந்து வந்தார். கோயம்புத்தூர்கலெக்டராகவும் அவர் முன்பு பணியாற்றியுள்ளார்.

செய்தித்துறை இயக்குனர் பதவிக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சில மாதங்கள் முன் வரை செல்வாக்கோடு வலம் வந்த நடராஜன்நியமிக்கப்பட்டுள்ளார். இவரை ஜெயலலிதா முதல்வர் அலுவலகத்தில் இருந்து தூக்கி அடித்த்தார்.

ஆனால், சசிகலாவின் (அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்) உதவியுடன் தலைமைச் செயலகத்திலேயே முக்கிய பதவியைப் பிடித்துவிட்டார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X