பிரபாகரனுக்கு 200 ஆண்டு சிறை: இலங்கையில் போராட்டம்
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
கடந்த 1996ம் ஆண்டு கொழும்பு நகரில் உள்ள இலங்கை மத்திய வங்கியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாகபிரபாகரனுக்கு 200 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை துவங்கிய கடந்த அக்டோபர்31ம் தேதி இந்தத் தீர்ப்பும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பேச்சுவார்த்தை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பெரும்பாலானவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனாலும்இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்ததை விட மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்தது. இலங்கைஅரசியலில் ஈடுபட வெகுவாக ஆர்வம் கொண்டிருப்பதையும் புலிகள் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பிரபாகரனுக்கு அளிக்கப்பட்ட 200 ஆண்டுகால சிறைத் தண்டனையை எதிர்த்து தமிழர்கள் வாழும்வடக்கு மற்றும் கிழக்கு இலங்கைப் பகுதிகளில் பெரும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன.
யாழ்ப்பாணம், வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பேரணிப் போராட்டம்நடத்தினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளும் பேரணியில் கலந்துகொண்டனர்.
பிரபாகரனுக்கு அளிக்கப்பட்டுள்ள 200 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும்,அவருக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்து கொண்டவர்கள்கோஷமிட்டனர்.
இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த கடுமையான போரின் போது ஏற்பட்டது தான் இந்தஅசம்பாவிதம் என்றும் தற்போது இலங்கையில் அமைதி திரும்பி அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் இந்தத் தீர்ப்பு தேவையே இல்லை என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்வலியுறுத்தினர்.
போரின் போது ஏற்படும் சம்பவங்களை எல்லாம் குற்றச் செயல்களாகக் கருதக் கூடாது என்று புலிகளும் சமீபத்தில்நடந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications