For Daily Alerts
Just In
வைகோ கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல மதிமுக முடிவு
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அக்கட்சியின் அவைத் தலைவர் எல். கணேசன் கூறினார்.
வேலூர் மத்திய சிறையில் வைகோவை சந்தித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வைகோவை ஜாமீனில் விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளவில்லை.
ஆனால் பொடா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவுள்ளோம்.
இதுதொடர்பாக யோசித்து முடிவெடுக்குமாறு வைகோ ஆலோசனை கூறியுள்ளார்.
வைகோவை கருணாநிதி சந்தித்துப் பேசியதில் எந்த அரசியலும் இல்லை. சகோதரப் பாசமே இந்த சந்திப்பின்பின்னணியில் இருந்தது. வேறு ஒன்றும் இல்லை என்றார் கணேசன்.
-->


