இந்திய கிரிக்கெட் அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு
ராஜ்கோட்:
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட 2தமிழக கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபாரமாகவெற்றி பெற்றது.
இதனால் மிகவும் கடுப்பாகிப் போன இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்றமூன்றாவது ஒருநாள் போட்டியில் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்குடன் சேர்ந்து கொண்டு தூள்கிளப்பினார்.
இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 196 ரன்களைக் குவித்தனர். இது மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குஎதிரான இந்தியாவின் உலக சாதனையாகும்.
ஆனால் சேவாக்குடன் வி.வி.எஸ். லட்சுமண் வந்து ஆடிக் கொண்டிருந்த போது சில ரசிகர்கள் மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்களின் மீது பாட்டில்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ரன் விகித அடிப்படையில் இந்தியா 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாகமேற்கு இந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை எடுத்திருந்தது.
ஒழுங்காக விளையாடி உண்மையான வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்கங்குலி. ஆனால் ரசிகர்களின் மோசமான நடவடிக்கை காரணமாக வெறும் பெயரளவுக்கு மற்றுமே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால் கங்குலி மிகவும் அதிருப்தி அடைந்தார்.
இதற்கிடையே அனில் கும்ப்ளே மற்றும் அஜித்அகர்கர் ஆகிய இருவருக்கும் கல்தா கொடுத்து விட்டார் கங்குலி.
அவர்கள் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம், அவர்களுக்கப்பதிலாக இரண்டு தமிழக வீரர்களை இந்திய அணியில் சேர்த்துள்ளது.
தமிழக அணியில் விளையாடி வரும் வேகப் பந்து வீச்சாளர் எல். பாலாஜியும், ரயில்வே அணிக்காக ஆடிக்கொண்டிருக்கும் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக்கும் தான் தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"இந்திய அணியில் இடம் பெறுவது தான் என்னுடைய கனவாக, லட்சியமாக இருந்தது. தற்போது அந்தக் கனவுநனவாகியுள்ளது. கடவுள் எனக்குக் கொடுத்த இந்த வரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வேன். இந்தியஅணியில் தொடர்ந்து நீடிப்பதற்காகக் கடுமையாக உழைப்பேன்" என்று இன்று சென்னை விமான நிலையத்தில்பாலாஜி மகிழ்ச்சியுடன் நிருபர்களிடம் கூறினார்.
இந்திய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி வரும் 15ம் தேதிஅகமதாபாத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும்.
கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாலும், குஜராத்தில் இன வன்முறையால்பாதிக்கப்பட்ட அகமதாபாத்தில் அடுத்த போட்டி நடைபெறவுள்ளதாலும் அங்கு வரலாறு காணாத பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications