For Daily Alerts
Just In
கிருஷ்ணாவுக்கு கருப்பு கொடி காட்ட காரைக்கால் விவசாயிகள் முடிவு
பாண்டிச்சேரி:
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் நாளை விசேஷ பூஜை நடத்த வரும் கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவுக்கு கருப்புக் கொடி காட்ட காரைக்கால் பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகத்தின் பிடிவாதத்தால் பாண்டிச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் பகுதி விவசாயிகளும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கும் குறுவைப் பயிர் சாகுபடி நடக்கவில்லை. சம்பா சாகுபடியும் சரிவர நடக்கவில்லை.
இந்த நிலையில் நாளை திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்புப் பூஜை நடத்த கிருஷ்ணா வருகிறார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த காரைக்கால் பகுதி விவசாயிகள் முடிவுசெய்துள்ளனர்.
கருப்புக் கொடி போராட்டத்தில் அதிமுகவும் கலந்துகொள்ளும் என்று தெரிகிறது. இதையடுத்து காரைக்காலில்பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-->


