For Daily Alerts
Just In
போலி குடும்ப அட்டைகளை பதுக்கி வைத்திருந்த ரேஷன் கடை ஊழியர்கள்
சென்னை:
போலி ரேஷன் கார்டுகளை பதுக்கி வைத்திருந்த ரேஷன் கடை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய உணவுத் துறைஅமைச்சர் ப. மோகன் உத்தரவிட்டார்.
அமைச்சர் மோகன் சென்னை பட்டினப்பாக்கம், கோட்டூர்புரம், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் திடீர் சோதனை நிடத்தினார்.
பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில், 17 போலி ரேஷன் கார்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார். மேலும் ஏராளமான அரிசி கூப்பன்களும் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கடையின் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
உணவு அமைச்சராக இருந்த பி. தனபால் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பின்னர், சமீபத்தில்தான் இந்தத் துறையின் பொறுப்புக்களை மோகன் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->


