For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐயப்பன் கோவில் யாத்திரை ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்த ஆயிரங்கால் மண்டபம் தமிழகத்தின் பண்டையகட்டிடக் கலையின் பெருமையை உணர்த்துவதாக உள்ளது.

திருவனந்தபுரம்:

சபரி மலையில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகாவிளக்கு தரிசன யாத்திரை இன்று முதல் தொடங்குகிறது.

இரண்டு மாதங்கள் தொடரும் இந்த சீசனில் லட்சக்கணக்கானவர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சுவாமி ஐயப்பனைதரிசித்து பலன் பெறுவர்.

இந்த தரிசன சீசனையொட்டி கேரள அரசும், கோவில் நிர்வாகமும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளன. ஆண்டுதோறும்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால் பம்மை நதியை அடங்கிய அந்தப் புண்ணியத்தலம் திணறுகிறது.

பக்தர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து தர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கோவில் அமைந்துள்ள பகுதியின்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களை நிறுத்த நீலக்கல் என்ற இடத்தில் 50 ஏக்கர் பரப்பில் பார்க்கிங் லாட் அமைக்கப்பட்ள்ளது. இது பம்பையில் இருந்து10 கி.மீ. தொலைவில் உள்ளது. கோவிலில் இருந்து இந்த இடத்துக்குத் திரும்ப கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்துபஸ்களை இயக்கும்.

கோவில் அமைந்துள்ள மலைப் பகுதியில் போதிய கழிவறைகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர்.திறந்த வெளியில் பக்தர்கள் காலைக் கடன் கழிக்க வேண்டிய நிலை உள்ளதால் சுகாதாரக் கேடு உச்சகட்டத்தில் இருந்து வருகிறது.இதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கழிவை அகற்ற 450 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கழிவைத் தூய்மைப்படுத்தி அப்புறப்படுத்த 2 மிகப் பெரிய எந்திரங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் குழுக்களும் பெருமளவில் குவிக்கப்பட உள்ளன. மலையேறுவம் பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அதைசந்திக்க ஆக்சிஜன் பார்லர்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு முதல் தினமும் 2,000 பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பி.எஸ்.என்.எல். இந்தப் பகுதிக்கும் தனது மொபைல் போன் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது. அதே போல தென்னகரயில்வே சிறப்பு முன் பதிவு கவுண்டர்களையும் இங்கு அமைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X