ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிப்பு: இளங்கோவன் கூட்டத்தில் பரபரப்பு
சேலம்:
சேலத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடும்பாவிஎரிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த தாளமுத்து நடராஜன் சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த சிலர் அவரைக் கொன்றுவிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த வழக்கில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. சேலம் போலீசார் வழக்கம்போல கள்ளச்சாரய வியாபாரிகளிடம் லஞ்சம்வாங்குவதிலும் கட்டப் பஞ்சாயத்துகளிலும் பிசியாக இருந்து வருகின்றனர்.
போலீசாரின் இந்த மந்தந்தத்தைக் கண்டித்தும், சோனியா காந்தியை ஜெயலலிதாவும் அவரது அமைச்சரவை சகாக்களும் அவ்வப்போதுவாய்க்கு வந்தபடி திட்டி வருவதைக் கண்டித்தும் இன்று சேலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டத்தை நடத்தியது.
இளங்கோவன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அவரே எதிர்பார்க்காத அளவுக்குபெரும் கூட்டம் கூடியது. பல்லாயிரம் பேர் இந்த ஆர்பாட்டத்தில் திரண்டனர். அப்போது ஜெயலலிதாவின் கொடும்பாவியை நடுரோட்டில் போட்டு காங்கிரஸ் தொண்டர்கள் எரித்தனர். ஜெயலலிதாவுக்கு எதிராக மிகக் காட்டமாக கோஷம் எழுப்பினார்.
கூடியிருந்த காங்கிரசாரும் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்து கோஷங்கள் போட்டனர்.
பின்னர் கலெக்டரிடம் சென்ற இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜனைக் கொலை செய்த கும்பலைக் கைது செய்யநடவடிக்கை எடுக்கக் கோரி மனு தந்தார்.
இதையடுத்து நிருபர்களிடம் இளங்கோவன் பேசுகையில், இந்த அரசு என்ன ஆட்சி நடத்துகிறது என்று தெரியவில்லை. ஒரு கொலைநடக்கிறது. பல மாதங்கள் ஆகியும் ஒருவரைக் கூட கைது செய்ய இந்த அரசால் முடியவில்லை. அப்புறம் எதற்கு இந்த போலீஸ்.
முன்பெல்லாம் மாநிலத்துக்கு ஒரு ஐ.ஜி. தான் இருந்தார். இப்போதெல்லாம் ஒவ்வொரு 6 மாவட்டத்துக்கும் ஒரு ஐ.ஜி. இருக்கிறார். கொலைநடந்தால் அந்த இடத்தில் ஐ.ஜி. இருப்பார். இப்போது ஐ.ஜிக்களை எங்கும் பார்க்க முடிவதில்லை. இவர்களுக்கு எதற்கு இந்தப் பதவியும்பவிசும். ஐ.ஜி. அருள் பெயரைச் சொன்னால் எவ்வளவு பெரிய கூட்டமும் கலைந்து ஓடும். அப்படிப்பட்ட அதிகாரிகள் இருந்த தமிழகபோலீஸ் இன்று செயலற்றுப் போய் நிற்கிறது.
செம்மலை என்று ஒரு அமைச்சர் சுகாதாரத் துறையை கவனித்து வருகிறார். அவர் இதே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான். அவரதுசொந்த ஊரிலேயே அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்டு நோயாளிகளை கொன்று வருகிறார்கள். சொந்த ஊரில் நடக்கும் இந்த லஞ்சலாவண்யத்தையே அவரால் தடுக்க முடியவில்லை. தமிழக அளவில் இவர் என்ன செய்யப் போகிறார்?.
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்துவிட்டால் டாக்டரில் ஆரம்பித்து, நர்ஸ், வார்டு பாய் என நோயாளிகளை பணம் கேட்டு உறிஞ்சிஎடுத்து வருகின்றனர்.
இன்னும் 10 நாட்களில் தாளமுத்து நடராஜனைக் கொன்ற கும்பலை கைது செய்யாவிட்டால் வேறு மாதிரியான போராட்டங்களில்ஈடுபடுவோம். முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் முன்னாலும் கோட்டை முன்பும் போராட்டம் நடத்துவோம் என்றார் இளங்கோவன்.
-->


