தீண்டாமையை ஆதரிக்கும் சங்கராச்சாரியார் மீது வழக்கு: புதிய தமிழகம்
கோயம்புத்தூர்:
தலித்களை தரக் குறைவாகப் பேசிய காஞ்சி சங்கராசாரியார் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய தமிழகம் கட்சிகூறியுள்ளது.
அக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் சங்கராச்சாரியார் தொடர்ந்து தலித்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.கோவில்களில் நுழைய தலித்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது தவறில்லை என்றரீதியில் அவர் பேசியுள்ளார்.
இதன் மூலம் தீண்டாமையை அவர் ஆதரிக்கிறார். இது தலித் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காகசங்கராச்சாரியார் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பிற தலித் அமைப்புகளுடன் இணைந்து சங்கராச்சாரியார் மீது சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும்.
மதத் தலைவரான சங்கராச்சாரியார் மதம் குறித்தும், பக்தி குறித்தும் மக்களிடையே விழுப்புணர்வைப் பரப்புவதைவிட்டுவிட்டு பிராமணஆதிக்கத்தையும், தீண்டாமையை ஆதரித்தும் பேசி வருவது வெட்கக் கேடானது.
இந்த சங்கராச்சாரியாரின் மீது தமிழக அரசு தானாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதே அரசியல் காரணங்களுக்காகத் தான். ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்ஆகிய அமைப்புகளுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கவே ஜெயலலிதா இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
இந்த சட்டத்தை எதிர்த்து பிற சிறுபான்மையின அமைப்புகளுடன் இணைந்து சென்னையில் ராஜ்பவன் நோக்கி வரும் டிசம்பர் 9ம் தேதிஊர்வலம் செல்வோம். தலித்களும் சிறுபான்மையினரும் இதில் பங்கேற்பர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதிசென்னையில் நடக்கும்.
பா.ஜ.க. கூட்டணியில் இடம் பிடிக்க ஜெயலலிதா செய்யும் சூழ்ச்சி தான் இந்த மதமாற்றத் தடைச் சட்டம் என்றார் கிருஷ்ணசாமி.
-->


