ஆந்திராவில் நக்சல்களின் கண்ணிவெடிக்கு 20 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் போர்ப் படையைச் சேர்ந்த நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில சிக்கிய அரசுப்போக்குவரத்துக் கழக பஸ் சுக்குநூறாக வெடித்துச் சிதறியது. இதில் 20 பயணிகள் உடல் சிதறி இறந்தனர். மேலும பலர்படுகாயமடைந்துள்ளனர்.
இந்த பஸ்சுக்குப் பின்னால் போலீசாரை ஏற்றி வந்த அரசு பஸஸைத் தகர்க்க நினைத்த நக்சலைட்டுகள் தவறுதலாக பஸ்ஸைத்தகர்த்துவிட்டனர்.
வாரங்கல் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு நடந்த இச் சம்பவத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதிவாசிகள் என்பதுகுறிப்பிடத்தக்கது. நக்சலைட்டுகளுக்கு ஆதிவாசிகளிடயைே பெரும் ஆதரவு இருந்து வரும் நிலையில் அவர்களை நக்சல்கள்தவறாகக் கொன்று குவித்துள்ளனர்.
இதனால் நக்சல்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிந்தகுண்டம் என்ற கிராமத்தின் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் சாலையில் இந்த கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வைத்திருந்தனர்.
இந்த அரசு பஸ் கண்ணிவெடியின் மீது சென்றபோது அது பயங்கரமாக வெடித்தது. இதில் பஸ் சாலையில் இருந்து தூக்கிஎறியப்பட்டது. வெடித்து சுக்குநூறாக சிதறியது. இதில் 20 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 17 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனால் இந்த பஸ்சுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த போலீஸ் பஸ் தப்பியது. அதிலிருந்த போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தப் பகுதியில் 5 நக்சலைட்டுகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாகபோலீசாரைத் தாக்க நக்சலைட்டுகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தவறுதலாக பயணிகள் பஸ்ஸை நக்சலைட்டுகள்தகர்த்துள்ளனர்.
இச் சம்பவத்தையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் இன்று நடந்தது.மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அதில் விவாதிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் நக்சல்களுக்கும் அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததுகுறிப்பிடத்தக்கது.
-->


