For Daily Alerts
Just In
சிறையில் வைகோவை சந்தித்தார் திருநாவுக்கரசர்
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் இன்றுவேலூர் மத்திய சிறையில் சந்தித்துப் பேசினார்.
வைகோவைப் பார்த்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சேது சமுத்திரம் திட்டம் குறித்து வைகோவிடம் பேசினேன். அதைப் பற்றி அவரும் விரிவாகவே எடுத்துக்கூறினார்.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வைகோ கருதுகிறார். அதன் காரணமாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இது அவரது உரிமை என்றார் திருநாவுக்கரசர்.
பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் வைகோவை வந்து சந்தித்த முதல் நபர் திருநாவுக்கரசர் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->


