For Quick Alerts
For Daily Alerts
Just In
கிராமங்களில் கட்டாய அரசு டாக்டர்கள்: அரசுக்கு பரிந்துரை
பெரம்பலூர்:
அரசு டாக்டர்கள் கிராமப்புறங்களில் கட்டாயமாக பணியாற்றும் வகையில் டாக்டர்கள் தேர்வு கவுன்சிலிங்கில்மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு சட்டமன்ற உறுதிமொழிக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக உறுதிமொழிக் குழு தலைவர் ஞானசேகரன் எம்.எல்.ஏ. பெரம்பலூரில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பணியாற்ற அரசு டாக்டர்கள் முன் வருவதில்லை. இதனால் கிராம மக்கள்,நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையை மாற்ற அரசு டாக்டர்கள் கட்டாயம் கிராமப்புறங்களில் குறிப்பிட்ட காலம் வரை பணியாற்றவேண்டும் என்று அரசு அறிவிக்க வேண்டும்.
இதற்கேற்ற வகையில் டாக்டர்கள் கவுன்சிலிங் விதிறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாகஅரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
-->


