கணவரை ஆள் வைத்துக் கொன்ற பெண்ணுக்கு தூக்கு
கோயம்புத்தூர்:
கள்ளக்காதலைக் கண்டித்ததால் கட்டிய கணவரை கொலை செய்த பெண், அவருடைய கள்ளக் காதலன் உள்பட 3பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர், அப்பச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினா (40). இவரது கணவர் துரைசாமி. இவர் கட்டிடகாண்டிராக்டராக இருந்து வந்தார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உண்டு.
குடும்பத்தில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டு வந்ததால், அவினாசியில் உள்ள ஜோதிடர் இளங்கம்பர் (61) என்பவரிடம்துரைசாமி அடிக்கடி தனது மனைவியுடன் சென்று வந்தார்.
அடிக்கடி போய் வந்ததால் இளங்கம்பருக்கும், ரத்தினாவுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டது. இது குறித்துதெரிய வந்தவுடன், துரைசாமிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ரத்தினாவை அவர் கண்டித்தார். ஆனால் கள்ளக் காதல் கண்ணை மறைக்கவே, துரைசாமியின் கண்டிப்பை ரத்தினாகண்டு கொள்ளவில்லை.
இளங்கம்பரிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார். அப்போது, துரைசாமியைக் கொன்று விடலாம் என்று ஐடியாகொடுத்தார் இளங்கம்பர். இதைத் தொடர்ந்து சின்னமணி என்பவரின் தலைமையில் ஒரு கும்பலை கொலை செய்யஅமர்த்தினார்கள்.
திருப்பூர் சிவன் தியேட்டர் அருகே கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, துரைசாாமியை இக்கும்பல்சரமாரியாக வெட்டிக் கொன்றது. அப்போது அதைத் தடுக்க முயன்ற பிரகாஷ் என்பவரையும் இக்கும்பல் வெட்டிக்கொன்றது.
இதுதொடர்பாக ரத்தினா, இளங்கம்பர், சின்னமணி ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன், இந்த மூன்று பேருக்கும் தூக்குத்தண்டனை மற்றும் தலா ரூ.17,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
-->


