For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபையில் கர்நாடக அதிமுக எம்.எல்.ஏ. மீது பயங்கர தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கர்நாடக மாநில அதிமுக எம்.எல்.ஏவான பக்தவச்சலத்தை 15 பேர் கொண்ட கும்பல் அம்மாநில சட்டசபைவளாகத்திலேயே வைத்து பயங்கரமாகத் தாக்கிக் கொலை செய்ய முயற்சித்தது.

கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏவான பக்தவச்சலம் விதான் சவுதாவில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர் அருகே எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் உள்ள தன் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போதுவடக்கு கேட் அருகே சுமார் 15 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.

"பிழைக்க வந்த உனக்கு அரசியல் வேறு வேண்டுமா? எங்கிருந்து வந்து இங்கு அரசியல் நடத்துகிறாய்?" என்றுகேட்டுக் கொண்டே பக்தவச்சலத்தை அந்தக் கும்பல் சராமாரியாகத் தாக்கியது.

இதனால் நிலைகுலைந்து போன அவர் அலறிக் கொண்டே கீழே விழுந்தார். அப்படியும் அந்தக் கும்பல் அவரைவிடாமல் தரையிலேயே தரதரவென்று இழுத்துச் சென்று மீண்டும் பயங்கரமாகத் தாக்கியது.

அப்போது அந்தக் கும்பலிலிருந்த ஒருவன், "உடனே தலைவரைக் கூப்பிடு. அவரும் இந்தக் காட்சியைப்பார்க்கட்டும்" என்று மற்றொருவனிடம் கூறினான். அவனும் ஓடிச் சென்று உடனடியாகத் திரும்பி வந்து, தலைவர்வரவில்லையாம் என்று கூறினான்.

இதையடுத்து மீண்டும் பக்தவச்சலத்தை சராமாரியாக அடித்து உதைத்தது அந்தக் கும்பல். வயிறு, மார்பு, முகம்என்று அவரை அடித்து மிதித்த அந்தக் கும்பல், பின்னர் அவர் கையில் வைத்துக் கொண்டிருந்த சில பைல்களைபிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டது.

அவர்கள் ஏறிச் சென்ற கார்களையும் பக்தவச்சலம் பார்த்துள்ளார். ஆனால் அவற்றின் நம்பர்களை நோட் பண்ணமுடியவில்லை என்று பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார்.

ஏதோ ஒரு கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் தன்னைத் தாக்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.தாக்கியவர்களை அடையாளம் காட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பலத்த காயமடைந்த பக்தவச்சலம் பெளரிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெங்களூர் கமிஷனர் சிங்கிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கும் இது குறித்து உடனடியாகத் தகவல்அனுப்பப்பட்டுள்ளது.

பக்தவச்சலம் தாக்கப்பட்ட அருகில் தான் விதான செளதா போலீஸ் நிலையம் உள்ளது. அங்கிருந்த வண்ணம்இந்தத் தாக்குதலை போலீசார் சும்மா பார்த்துக் கொண்டிருந்ததாக பக்தவச்சலம் நமது செய்தியாளரிடம் கூறினார்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாகவே தமிழர்கள், குறிப்பாக அதிமுகவினர்குறிவைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியின் வீடு சூறையாடப்பட்டது.இதில் ஈடுபட்ட கும்பல் தான் தமிழ் படங்களைத் திரையிட்ட தியேட்டர்களையும் பயங்கரமாகத் தாக்கியுள்ளது.

இந்நிலையில் அதிமுக எமஎல்ஏவை சட்டசபை வளாகத்தில் வைத்தே கன்னட வெறிக் கும்பல் தாக்கியுள்ளது. இதில்மத்திய அரசு உடனே தலையிட்டால் தான் விடிவு பிறக்கும்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X