வைகோவின் காவல் மேலும் நீட்டிப்பு: நாளை வேலூர் சிறை செல்கிறார் வெங்கைய்யா நாயுடு
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக் காவல் வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவல் நீட்டிப்புக்காக அவர் இன்று சென்னை பூந்தமல்லி சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.அப்போது அவரது காவலை நீட்டிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் கோரினார்.
வைகோ தரப்பில் ஜாமீன் ஏதும் கோரப்படவில்லை. இதையடுத்து அவரை வரும் 18ம் தேதி வரை காவலில் வைக்கபொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அதே போல வைகோவோடு சேர்த்து கைது செய்யப்பட்ட மற்ற 8 பேரின் காவலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மயிலாடுதுறையில் வைகோ மீது பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் தேர்தல் மோதல் வழக்கு விசாராணவரும் டிசம்பர் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்காக 5ம் தேதி அவர் நாகப்பட்டிணம் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என நீதிபதி மீனாட்சி சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறையில் நடந்த திமுக, அதிமுக மோதல் வழக்கில் வைகோ மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுநினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு நாளை வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைசந்திக்கவுள்ளார்.
வைகோ கைது செய்யப்பட்டு 125 நாட்களுக்கு மேலாகி விட்ட போதிலும் இதுவரை பா.ஜ.கவைச் சேர்ந்த எந்தஒரு முக்கியமான தலைவர்களோ, முக்கிய அமைச்சர்களோ வந்து அவரைச் சந்திக்கவில்லை.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான பா.ஜ.கவை சேர்ந்த திருநாவுக்கரசர் கூட சமீபத்தில் தான்வைகோவைச் சந்தித்துப் பேசினார்.
மத்தியில் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இருந்த போதிலும், பொடா வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதங்கள் தலைவரை எந்த ஒரு பா.ஜ.க. தலைவரும் வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கம் மதிமுகவினரிடையேபரவியுள்ளது.
இதற்கிடையே வைகோவைப் பார்க்க வெங்கையா நாயுடு "இதோ வருகிறார், அதோ வருகிறார்" என்று பா.ஜ.க.தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்ததே தவிர, அவர் வேலூர் சிறைக்கு வந்து இதுவரைவைகோவை சந்திக்கவே இல்லை.
இந்நிலையில் நாளை வைகோவை வெங்கையா நாயுடு சந்திக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
தவெக ஆட்சி அருமையாக இருக்கு.. குற்றங்கள் எல்லா ஆட்சியிலும் நடக்கிறது! விஜய்க்கு ஆதரவாக பேசிய வைகோ -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ!












Click it and Unblock the Notifications