For Daily Alerts
Just In
சென்னை: மீன் பாடி வண்டிகளை மீண்டும் ஓட்ட அனுமதி கோரி ஊர்வலம்
சென்னை:
மீன் பாடி வண்டிகளை மீண்டும் ஓட்ட அனுமதி கோரி சென்னையில் அவற்றின் உரிமையாளர்கள் ஊர்வலம்நடத்தினர்.
சென்னை நகரில் பல உயிர்களைப் பறிப்பதற்குக் காரணமாக இருந்த மீன் பாடி வண்டிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் காலவரையற்ற தடை விதித்தது.
இதற்கு மீன் பாடி வண்டி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் நகரில் மீன் பாடி வண்டிகளை ஓட்ட அனுமதிக்கக் கோரி சென்னையில் இன்று அவர்கள் ஊர்வலம்நடத்தினர்.
சைதாப்பேட்டை சின்னமலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் ஆளுநர் மாளிகையில் முடிவடைந்தது. இதில்500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆளுநர் மாளிகையில் இது தொடர்பான மனு ஒன்றையும் மீன் பாடி வண்டி உரிமையாளர்கள் அளித்தனர்.
-->


