சென்னையில் வேன், மீன் பாடி வண்டி மீது லாரி மோதல்: 2 பேர் பலி
சென்னை:
சென்னையில் ஒரு வேன் மீதும், மீன் பாடி வண்டி மீதும் ஒரு லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
சென்னை-கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழங்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேனும் லாரியும் பூந்தமல்லியிலிருந்துவந்து கொண்டிருந்தன. வேனின் மேல் பகுதியில் சிலர் உட்கார்ந்திருந்தனர்.
வேனும் லாரியும் போட்டி போட்டுக் கொண்டு பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில்கோயம்பேடு அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது லாரி திடீரென்றுபின் பக்கமாக மோதியது.
இதனால் மேல் பகுதியில் அமர்ந்திருந்த சிவலிங்கம், வேலு மற்றும் செண்பகவல்லி ஆகிய மூன்று பேர் நிலைதடுமாறி வேனின் முன் தலைகுப்புற விழுந்தனர். இதில் சிவலிங்கம் மீது வேன் ஏறி இறங்கியதால் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து வேன் நின்றவுடன், அந்த லாரி வேனை முந்திக் கொண்டு வேகமாகச் செல்ல முயற்சித்தது. அப்போதுஎதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்த ஒரு மீன் பாடி வண்டி மீது லாரி பயங்கரமாக மோதியது.
இதில் மீன் பாடி வண்டியை ஓட்டி வந்த வேலு என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
வேனில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த வேலுவும் செண்பகவல்லியும் படுகாயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மோசமான விபத்து குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட லாரியையும்லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.
-->


