பழனி மூலவர் சிலையை அகற்றுவதை எதிர்த்து உண்ணாவிரதம்
சென்னை:
பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில்உண்ணாவிரதம் நடந்தது.
பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சிலை தேய்ந்துவிட்டதால், பூஜை செய்வதற்கு உகந்ததாக இல்லை என்றுகூறிய புதிய சிலையை நிர்மாணிக்க காஞ்சி மடம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை தமிழக அரசும் ஏற்றுள்ளது.ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
5,000 ஆண்டுகளுக்கு முன்பு நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சிலையை அகற்றுவது தமிழ் கலாசாரத்திற்குமிகப் பெரிய இழுக்காக அமையும் என்று புகார் எழுந்துள்ளது.
அரசின் முடிவைக் கண்டித்து சென்னையில், வடபழனி சித்தர், காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
வடபழனி சித்தர் கூறுகையில், சேதமடைந்துள்ளதாக கூறப்படும் மூலவர் சிலையை சரி செய்ய தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக காணப்படும், 5000 ஆண்டுகளுக்குமுன்பு சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாஷனத்தால் ஆன மூலவர் சிலையை அகற்றுவது மிகவும்கண்டிக்கத்தக்க ஒன்று.
மூலவர் சிலையை அகற்றி விட்டு, புது சிலையை வைத்து அதற்கு அபிஷேகம் செய்யலாம் என்று தமிழக அரசுகூறுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் புனிதத்தன்மையை சிதைத்து விடும் என்றார் அவர்.
-->


