For Daily Alerts
Just In
பாகிஸ்தான் வர சு. சுவாமிக்கு முஷாரப் அழைப்பு
மதுரை:
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என்று அந்நாட்டு ராணுவஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் நிருபர்களிடம் சுவாமி பேசுகையில்,
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஜலீல் அப்பாஸ் ஜிலான் மூலம் இது தொடர்பான அழைப்பு எனக்குக்கிடைத்துள்ளது.
நானும் பாகிஸ்தான் செல்ல ஆர்வமுடன் இருக்கிறேன். வாகா எல்லைப் பகுதி வழியாக காரில் செல்ல முடிவுசெய்துள்ளேன்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். அனுமதி கிடைத்ததும் நான்பாகிஸ்தான் செல்வேன் என்று சுவாமி கூறினார்.
-->


