இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்றைய தினம் இந்தியா கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுக பங்கேற்காத நிலையில், தவெக கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தவெகவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே தவெக ஏன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.. வரும் காலத்தில் தவெக இதில் கலந்து கொள்ளுமா என்பது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் மொத்தமாக மாறிவிட்டது அனைவருக்கும் தெரியும். இந்தச் சூழலில் தான் டெல்லியில் இன்று முதல்முறையாக இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 25 கட்சிகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்தக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது.

INDIA Bloc Meeting

திமுக

தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையில், திமுக இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. மறுபுறம், இப்போது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கைகோர்த்துள்ள சூழலில், விஜய் கட்சி அதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தவெக தரப்பிலும் யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

காங்கிரஸ்

இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்கத் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கேட்டபோது, "தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டது. அதாவது தவெக மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் அக்கட்சிக்கு எம்பிக்கள் யாரும் இல்லை. இதனால் தான் அவர்களுக்கு அழைப்பு இல்லை என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.

திருமாவளவன்

இது தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், "மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல், காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக தவெகவுக்கு எப்படி அழைப்பு விடுக்க முடியும்? அதனால் கூட அழைப்பு விடுக்காமல் இருக்கலாம். இக்கூட்டத்தில் காங்கிரஸ் இந்த விவகாரத்தை முன்வைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியா கூட்டணியின் எதிர்கால நிகழ்வுகளில் தவெகவும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

விசிகவைப் பொறுத்தவரை, தவெக இந்தியா கூட்டணியில் இணைவதை வரவேற்கிறோம். இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் தவெகவை அழைக்க முடிவெடுத்தால், அதனை நாங்கள் முழுமனதுடன் வரவேற்போம். விசிக ஏற்கனவே இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கிறது" என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

விஜய் அரசு

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள சூழலில், விஜய் அரசு கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் சொல்லி வருகிறார்கள். இது தொடர்பாக அவர், "தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு இன்னும் ஓரிரு மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய அனைத்துக் கட்சிகளும் தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்துள்ளோம். ஆதரவு தொடரும் என்பதால் ஆட்சி கவிழாது

நாங்கள் இப்போது தமிழக அரசின் ஒரு பகுதியாக இருக்கிறோம்.. அமைச்சரவையில் இணைந்துள்ளோம். எனவே, தவெக அரசு தனது பதவிக்காலம் முடியும் வரை நிலையாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களின் ஆதரவு ஆட்சியின் இறுதி வரை தொடரும்" என்று திருமாவளவன் உறுதியளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+