உலகப் பிரசித்தி பெறும் திருச்சி சுருட்டுகள்
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் உருவாக்கப்படும் ஒரு அடி நீள சுருட்டுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பீடி இழைகளைக் கொண்டே இந்த சுருட்டு உருவாக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு இஞ்ச் விட்டம் கொண்ட இந்த சுருட்டைப்பற்ற வைத்தால் 2 மணி நேரத்துக்கு புகை விட்டுக் கொண்டே இருக்கலாம்.
திருச்சியைச் சேர்ந்த நடராஜ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் இதைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 80ஆண்டுகளாக சுருட்டு ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தாலும் ஓரடி நீள சுருட்டுத் தயாரிப்பு சமீபத்தில் தான் தொடங்கியது.
ஆனால், தயாரிப்புத் தொடங்கிய சில மாதத்திலேயே வெளிநாட்டு ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துவிட்டது என்கிறார் இந்தநிறுவனத்தின் இயக்குனர் நடராஜன். குறிப்பாக இலங்கையில் இருந்து தான் அதிக ஆர்டர்கள் வருகின்றனவாம்.
12 இன்ஜ் நீளம் கொண்ட (ஓரடிக்கு 6 செ.மி. குறைவு) இந்த சுருட்டுகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் நல்லடிமாண்ட் உள்ளது.
சுருட்டுகளுக்குப் பெயர் போன கியூப நிறுவனங்களையும் வென்று ஆர்டர்களைக் குவித்து வருகிறது இந்த திருச்சி நிறுவனம்.
-->


