For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூசிலாந்தில் மோசடி: இந்திய தம்பதி வெளியேற்றம்

By Staff
Google Oneindia Tamil News

வெலிங்டன் (நியூசிலாந்து):

இறந்த குழந்தையின் அடையாளங்களைப் பயன்படுத்தி தங்கள் குழந்தை நியூசிலாந்தில் பிறந்ததாகக் கூறி அந் நாட்டில்குடியேறிய இந்தியத் தம்பதியை உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சஞ்சீவ் சதீஷ் அரோரா (வயது 36). இவரது மனைவி கீதாஞ்சலி (29). இருவரும் கடந்த 1996ம் ஆண்டுநியூசிலாந்துக்கு வந்தனர். குடியுரிமை ஏதும் இல்லாமல் தங்கள் குழந்தையுடன் இருவருமே சட்டவிரோதாமாக வசிக்கஆரம்பித்தனர்.

இதை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் அந் நாட்டு குடியேற்றத்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அவர்களை 2மாதங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்தத் தம்பதி மோசடித் திட்டம் போட்டனர். இந்தியாவில் பிறந்த தங்களது குழந்தையை நியூசிலாந்தில் பிறந்ததைப்போலக் காட்டி அக் குழந்தைக்கு குடியுரிமை பெறத் திட்டமிட்டனர். அதன் மூலம் தாங்களும் அங்கேயே குடியேறிவிட முடிவுசெய்தனர்.

Newzelandஇதையடுத்து ஆக்லாந்து நகரில் உள்ள பல மயானங்களுக்குச் சென்றனர். அங்கு புதைக்கப்பட்ட குழந்தைகளின்அடையாளங்களை அங்குள்ள கல்வெட்டுகளில் சென்று திரட்டினர். தங்கள் குழந்தையின் வயதுக்கு ஒத்து வந்த இறந்தகுழந்தையின் முகவரி மற்றும் அடையாளங்களைத் திரட்டினர்.

பின்னர் தங்கள் குழந்தைக்கு இறந்த அந்தக் குழந்தையின் பெயரைச் சூட்டினர். குழந்தை பிறப்பையும் பதிவு செய்தனர். குழந்தைபிறந்தவுடன் பதிவு செய்ய மறந்துவிட்டதாகவும் இப்போது தான் பதிவு செய்வதாகவும் கூறி அக் குழந்தைக்கு நியூசிலாந்திலேயேபர்த்-சர்டிபிகேட் வாங்கினர்.

இதையடுத்து அந்தக் குழந்தையை வைத்து தங்களுக்கும் குடியுரிமை கோரி விண்ணப்பித்தனர். அவர்களுக்கு குடியுரிமையும்கிடைத்தது. தங்களுக்கு நியூசிலாந்து பாஸ்போர்ட்டும் வாங்கிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து ஆக்லாந்திலேயே ஒரு நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜர் வேலையில் சேர்ந்தார் அரோரா. இதையடுத்து வங்கிக்கடன் வாங்கிய அரோரா ஆக்லாந்திலேயே ஒரு பெரிய வீட்டையும் வாங்கினார். தனக்கு நியுசிலாந்திலேயே டிரைவிங்லைசென்சும் எடுத்து முழுக்க முழுக்க அந் நாட்டு பிரஜையானார்.

சட்டவிரோதமாக அந் நாட்டு பிரஜையாகவே வாழ்ந்து வந்தது இத் தம்பதி.

இவர்கள் மீது சந்தேகமடைந்த அந்நாட்டு போலீசாரும் குடியேற்றத்துறையினரும் விசாரணை நடத்தியபோது இவர்களது குட்டுவெளிப்பட்டது. உடனே இவர்கள் மீது வழக்கும் போடப்பட்டது.

ஆக்லாந்தி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது நீதிபதி ஜெர்மி டூக் இத் தம்பதியை வன்மையாகக் கண்டித்தார். இதன்மூலம் நியூஸிலாந்து நாட்டின் ஆவணக் காப்பகங்களில் பெரும் குறைபாடு உள்ளது தெரியவந்திருப்பதாகவும், அந்தக்குறைபாட்டை அரோராவும் அவரது மனைவியும் தவறாகப் பயன்படுத்தி நாட்டையே ஏமாற்றியிருப்பதாகவும் கூறினார்.

இது போன்ற குற்றங்கள் நியூசிலாந்தின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவித்துவிடும் என்றார். பாஸ்போர்ட் சட்டத்தில் இருந்து,பிறப்புச் சான்றிதழ், குடியேற்றம் என 8 மாபெரும் குற்றங்களை இவர்கள் செய்திருப்பது உறுதியாகிவிட்டதாக நீதிபதி கூறினார்.

இவர்களுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்த நீதிபதி உடனே நாட்டை விட்டு வெளியேற்றவும் உத்தரவிட்டார்.இந்தியாவுக்குத் திரும்பச் செல்ல விமானக் கட்டணமாக 10,000 அமெரிக்க டாலர்களையும் இவர்களிடம் இருந்தே வசூலிக்கவும்ஆணையிட்டார்.

நியூசிலாந்து நாட்டில் கிடைத்த அனைத்து அரசு சலுகைகளுக்கும் இவர்களிடம் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட்டப்பட்டது.

அரோராவும் அவரது மனைவியும் இன்று (டிசம்பர் 3) நியூசிலாந்தைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். அவர்களைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இச் சம்பவத்தையடுத்து பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் குறித்த ஆவணங்களில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதுநியூசிலாந்து.

பண ஆசை மற்றும் தங்களது மகிழ்ச்சியான வாழ்வுக்காக நமது நாட்டின் மானத்தை வாங்கியுள்ளனர் இந்தத் தம்பதி.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X