தம்பிதுரை மனைவியின் கல்லூரிக்கு எதிராக வழக்கு
சென்னை:
அமைச்சர் தம்பிதுரையின் மனைவி பானுமதி தலைவராக உள்ள அதியமான் பொறியியல் கல்லூரிக்கு எதிராகசென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை சென்னையைச் சேர்ந்த வக்கீல் சுவாமிநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் அவர்கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டப்படி, பொறியியல் கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலமும், கலைக் கல்லூரிகளுக்கு 10ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நிர்ணயித்துள்ளது.
ஆனால் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை,ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 216.38 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலப் பரப்பை தொழில்நுட்பக் கவுன்சிலும் அங்கீகரித்துள்ளது. ஆனால் இது சட்டவிரோதமானது.உச்சவரம்பைத் தாண்டி, மிக அதிக அளவிலான நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது அதியமான் பொறியியல்கல்லூரி.
தமிழ்நாடு நிலச் சீர்திருத்த சட்டத்தின் படி நிலப்பரப்பை கொண்டிராத சில பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணாபல்கலைக்கழகம் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. ஆனால் அதியமான் பொறியியல் கல்லூரி தொடர்பாக அதுஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, அதியமான் கல்லூரிக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் சட்டவிரோதமானதே. சட்டத்திற்கு விரோதமாககொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை ரத்து செய்து கோர்ட் உத்தரவிட வேண்டும். அதுவரை கல்லூரியின்செயல்பாடுகளை முடக்கி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சுவாமிநாதன்.
இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் குறுக்கிட்டு, "இது பொது நலன் வழக்கு அல்ல. நிலப்பரப்புதொடர்பான அரசு உத்தரவு பாரபட்சமான முறையில் அனுப்பப்படவில்லை. மொத்தம் 66 பொறியியல்கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது" என்றார்.
இதையடுத்து அதுதொடர்பான தகவல்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்இவ்வழக்கு தொடர்பான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது.
-->


