காட்டில் சிக்கிய நாகப்பாவின் டைரி, ஏ.கே.47 தோட்டாக்கள்
கொள்ளேகால் (கர்நாடகம்):
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் உடல் கிடந்த செங்கடி காட்டுப் பகுதியில் அவர் தன் கைப்பட எழுதியஒரு டைரி மற்றும் ஏ.கே.47 துப்பாக்கித் தோட்டாக்களின் எஞ்சிய பகுதிகள் ஆகியவற்றை கர்நாடகஅதிரடிப்படையினர் கண்டெடுத்தனர். அதில் வீரப்பன் தனக்கு செய்த சித்திரவதைகள் குறித்து விளக்கமாகஎழுதியுள்ளார் நாகப்பா.
காட்டில் நாகப்பா பிணமாகக் கிடந்த இடத்தில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய மனைவி பரிமளாமற்றும் குடும்பத்தினர் சென்றனர்.
அவர்களை அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் காட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.
நாகப்பாவின் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது அதிரடிப்படையினர் அந்தப்பகுதியைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது நாகப்பா பிணமாகக் கிடந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில் ஒரு டைரி கிடந்ததை அதிரடிப்படையினர்கண்டெடுத்தனர். அது நாகப்பாவின் டைரி தான் என்பது தெரிந்தவுடன் அனைவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
நாகப்பா தினமும் சில மந்திரங்களை எழுதுவதற்காக அந்த டைரியைப் பயன்படுத்தி வந்தார். வீரப்பன் தனக்குச்செய்த சித்திரவதைகள் குறித்தும் நாகப்பா அதில் எழுதியுள்ளார்.
சிறிது தூரம் நடப்பதற்குக் கூடத் தன்னை வீரப்பன் அனுமதிக்கவில்லை என்று டைரியில் குறிப்பிட்டுள்ளநாகப்பா, சில நாட்களில் ஒரு நாள் முழுவதும் ஒரே இடத்திலேயே அமர்ந்திருந்ததாகவும் அந்த டைரியில்எழுதியுள்ளார்.
வீரப்பன் தனக்கு எப்போதும் காலை உணவே தருவதில்லை என்றும், மதியமும் இரவும் மட்டும் தான் தந்தான்என்றும் டைரியில் நாகப்பா உருக்கத்துடன் கூறியுள்ளார்.
கடந்த 4ம் தேதி வரை டைரி எழுதியுள்ளார் நாகப்பா. எனவே அவர் 5ம் தேதிதான் கொல்லப்பட்டிருப்பார் என்றுதெரிகிறது.
மேலும் கடந்த நவம்பர் 5ம் தேதி கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னாச்சி மகாதேவசாமிதன்னை வந்து சந்தித்துப் பேசியதாகவும் டைரியில் நாகப்பா குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மகாதேவசாமியிடம்கர்நாடகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அம்மாநில டி.ஜி.பி. மடியாள் இன்று கூறினார்.
இந்த டைரியின் மூலம் மேலும் பல முக்கியமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைரியைத் தவிர ஐந்து டம்ளர்கள், "ஹேர் டை", சில பாத்திரங்கள், துணிகள், கொசுவர்த்திச் சுருள் ஆகியவையும்அருகே கிடந்தன. இதனால் வீரப்பனுடன் ஐந்து பேர் வரை தான் உள்ளனர் என்று அதிரடிப்படையினர்கருதுகின்றனர்.
ஏ.கே.47 தோட்டா குழல்கள்:
இந்நிலையில் மற்றொரு இடத்தில் ஏ.கே.47 துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்ட 27 தோட்டாக்களின் எஞ்சியபகுதிகளையும் அதிரடிப்படையினர் கண்டுபிடித்தனர்.
துப்பாக்கியால் சுடும்போது தோட்டாவின் பின்பகுதியில் உள்ள உலோக குழல் பகுதி கீழே விழும். அவ்வாறுவிழுந்த 27 தோட்டா குழல்களைத்தான் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவை அதிரடிப்படையினர் வைத்துள்ள ஏ.கே.47 துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடியவை என்பதும் தெரியவந்துள்ளது.
அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில் தான் நாகப்பா கொல்லப்பட்டார் என்று வீரப்பன் ஆறாவதாகஅனுப்பிய கேசட்டில் கூறியிருந்தான்.
தற்போது 27 தோட்டா குழல்கள் கிடைத்திருப்பதன் மூலம் உண்மையிலேயே அவர் என்கெளண்ட்டரில் தான்கொல்லப்பட்டாரா என்பது குறித்த சந்தேகம் வலுத்துள்ளது. ஆனால் நாகப்பாவின் உடலில் பாய்ந்திருந்த தோட்டாஏ.கே.47க்கு உரியதுதானா என்பது குறித்து தெரியவில்லை.
இருந்தாலும் இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications