For Daily Alerts
Just In
இந்து மதம் குறித்த கருத்து: கருணாநிதிக்கு ராமதாஸ் ஆதரவு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி இந்துக்களை இழிவுபடுத்தியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதச்சார்பற்ற ஒரு நாட்டில், ஒருவரது மதச்சார்பின்மை குறித்துசந்தேகப்படுவது தவறானது, கண்டனத்துக்குரியது.
இந்துக்கள் குறித்துத் தான் கூறிய கருத்துக்கள் தன்னுடைய சொந்தக் கருத்து அல்ல, பல இந்து மதத் தலைவர்கள்சொல்லியதைத்தான் நான் திரும்பக் கூறினேன் என்று கருணாநிதி பலமுறை விளக்கம் தந்துவிட்டார். பிரச்சினையைஅத்தோடு விட்டிருக்க வேண்டும்.
ஆனால், கருணாநிதியின் விளக்கத்திற்குப் பிறகும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றுவது முறையல்ல என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-->


