குற்றங்களைத் தடுக்க லாட்ஜ்களில் குளோஸ் சர்க்யூட் கேமராக்கள்
சென்னை:
குற்றச் செயல்களைத் தடுக்கவும், லாட்ஜுகளுக்கு வருவோரைக் கண்காணிக்கவும் சென்னை நகரில் உள்ளலாட்ஜ்களில் கண்காணிப்பு கேமராக்களை வைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
வெளியூர்களிலிருந்து சென்னை நகருக்கு வரும் பல குற்றவாளிகள் தங்களது குற்றச் செயல்களைலாட்ஜூகளில்தான் நிறைவேற்றுகிறார்கள். வெளியூரலிருந்து கூட்டி வந்து கற்பழித்து, கொலை செய்து விட்டுதப்புவது, தற்கொலை செய்து கொள்வது ஆகிய குற்றங்கள் லாட்ஜூகளில் அதிகரித்த வண்ணம் உள்ளன.இவற்றைத் தடுக்க சென்னை நகர காவல்துறை சில திட்டங்களை வகுத்துள்ளது.
இதுதொடர்பாக இணை ஆணையர் சைலேந்திர பாபு தலைமையில் காவல்துறை அதிகாரிகள், லாட்ஜ்உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பாரிமுனை பகுதியைச் சேர்ந்த ஏராளமான லாட்ஜ் உரிமையாளர்கள்கலந்து கொண்டனர்.
அப்போது லாட்ஜ் உரிமையாளர்களுக்கு சில முக்கிய கட்டளைகள் இடப்பட்டன. அதன் விவரம்:
- லாட்ஜ்களின் வரவேற்பறையில் ரகசிய கேமராக்கள் வைத்து வருவோர், போவோரைக் கண்காணிக்கவேண்டும். லாட்ஜ்க்கு வருவோரின் முகம் கேமராவில் பதிந்து விடுவதால், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைஎளிதில் அடையாளம் காண முடியும். எனவே இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.
- ஒரே அறையில் பல பேர் தங்கினால், அவர்கள் குறித்து விசாரித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும்.
- லாட்ஜ்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் குறித்த விவரத்தை புகைப்படங்களுடன் காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.
- லாட்ஜில் தங்குவோரிடம் முழு முகவரியும் பெறப்பட வேண்டும். அவர்கள் கொண்டு வரும் சூட்கேஸ் போன்றவற்றை திறந்து பார்த்து சோதனை செய்ய வேண்டும்.
இது போன்ற உத்தரவுகளை காவல்துறை பிறப்பித்துள்ளது. இதனால் இனி லாட்களில் தங்கச் செல்வோர் தீவிரசோதனைகளுக்கும், கண்காணிப்புகளுக்கும் ஆளாகப் போவது உறுதி.
-->


