அதிமுக மகளிர் அணியினர் கட்டிப் புரண்டு சண்டை: சேலைகள் கிழிப்பு
பாண்டிச்சேரி:
எம்.ஜி.ஆர். சிலைக்கு யார் முதலில் மாலை போடுவது என்று எழுந்த பிரச்சனையில் அதிமுக மகளிர்அணியினருக்கு இடையே பயங்கர அடிதடி ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சேலைகளை உருவி அடித்துக்கொண்டனர்.
இதில் பாண்டிச்சேரி அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மகளிர் அணி சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்குஊர்வலமாக சென்று மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலைக்கு ஊர்வலம் புறப்பட்டது. சிலையை அடைந்தவுடன் முதலில் யார் மாலைபோடுவது என்பதில் தகராறு ஏற்பட்டது.
அந்தப் பெண்கள் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். பின்னர் ஒருவரை ஒருவர்முகத்தில் குத்திக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் சேவையைப் பிடித்து உருவி, கிழித்து அடித்துக் கொண்டனர். தொடர்ந்துகட்டிப் புரண்டு உருண்டு கடித்தும், முடியைப் பிடித்து இழுத்தும் குத்திக் கொண்டனர். பலருக்கு மிதியும் விழுந்தது.
அந்த இடமே போர்க் களமாக மாறியது. ஆண்கள் காதுகளைப் பொத்திக் கொண்டு ஓடும் அளவுக்கு மகளிர்அணியினர் நாரசாரமான வார்த்தைகளை உபயோகித்தனர்.
இதில் மாநில அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கலைச்செல்வி கடுமையாக தாக்கப்பட்டார். பலத்தகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பாண்டிச்சேரி அதிமுகவில் கோஷ்டிப் பூசல் அதிகம். அதிலும் குறிப்பாக மகளிர் அணியில் மத்தியில் அது ரொம்பஅதிகம். அதை இந்த முறை தெருவிலேயே காட்டிவிட்டார்கள் இந்தப் பெண்கள்.
-->


