For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.ஜி.ஆர். என்றொரு மாயம்

By Staff
Google Oneindia Tamil News

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரி.ன் 15-வது ஆண்டு நினைவு நாள் இன்றுஅனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி அதிகாலை சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள தனதுஇல்லத்தில் எம்.ஜி.ஆர். மரணமடைந்தார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது அவரது மரணம்.

அண்ணாவுக்குப் பிறகு, மக்களின் அன்பையும், ஆதரவையும் ஏகபோகமாக அனுபவித்த தலைவர் எம்.ஜி.ஆர்.தொடர்ந்து 13 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். கடைசி வரை ஜெயித்தவர். கடைசியில் படுத்துக் கொண்டே ஜெயித்தார்.

வாத்தியார், மக்கள் திலகம், எங்கள் வீட்டுப் பிள்ளை, புரட்சித் தலைவர் என அவரது ரசிகர்களால் செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்டவர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு, ரோட்டோரத்தில் வசித்தவர்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் என வாரிவழங்கிய வள்ளல். பெரும்பாலும் படிப்பறிவில்லாத ஏழை மக்களால் அதிகமாக விரும்பப்பட்டவர். படித்தவர்கள்மத்தியில் இவர் மீது ஒருவித கோபம் இருந்தது உண்மை.

அவருக்கு இன்று நினைவு நாள். இதையொட்டி சென்னையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைதிப்பேரணி நடந்தது.

சென்னை-அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து இந்தப் பேரணி புறப்பட்டது.ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் புடைசூழ திறந்த ஜீப்பில் நின்று கொண்டு சென்றார் ஜெயலலிதா.சபாநாயகர் காளிமுத்துவும் மற்ற அமைச்சர்களும் பேரணியில் நடந்து வந்தனர்.

மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் சமாதியில் இந்தப் பேரணி முடிவடைந்தது. பின்னர் எம்.ஜி.ஆரின்சமாதியில் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் புலமைப்பித்தன் தலைமையில் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுகவினர்உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து அனைவரும் எம்.ஜி.ஆருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பெரியார் நினைவு தினம்:

இதற்கிடையே திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் நினைவு தினமும் இன்றுஅனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, சபாநாயகர் காளிமுத்து, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் பெரியாரின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெரியார்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதே போல் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர்குமரி அனந்தன், மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரும் பெரியார் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X