"போலாரிஸ்" தலைவரின் பாஸ்போர்ட் ஒப்படைப்பு: இந்தியா திரும்புகிறார்
டெல்லி:
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட "போலாரிஸ்" சாப்ட்வேர்நிறுவனத்தின் தலைவர் அருண் ஜெயினின் பாஸ்போர்ட்டை அந்நாட்டு அதிகாரிகள் இன்று அவரிடம் மீண்டும்ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் விரைவில் சென்னை திரும்புகிறார்.
இந்தோனேஷியாவில் உள்ள "பாங்க் ஆப் கிரஹா" கொடுத்த புகாரின் அடிப்படையில் அருண் ஜெயினும், துணைத்தலைவர் ராஜிவ் மல்ஹோத்ராவும் ஜகார்தாவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து மத்திய அரசு நேரடியாகத் தலையிடவே, அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளை திருப்பி ஒப்படைக்காமல் இந்தோனேஷியா இழுத்தடித்துக்கொண்டிருந்தது. இதனால் அவர்கள் இந்தியா திரும்புவதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இந்நிலையில் ஜெயின் மற்றும் மல்ஹோத்ராவின் பாஸ்போர்ட்டுகளை இந்தோனேஷிய அதிகாரிகள் இன்றுஅவர்களிடமே மீண்டும் ஒப்படைத்தனர். இதனால் அவர்கள் இந்தியா திரும்புவதற்கான தடை நீங்கிவிட்டது.
இதையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் இருவரும் சென்னை வந்து சேருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் வேறு வேலை எதுவும் இல்லையென்றால் அவர்கள் இன்றேதிரும்புவார்கள் என்றும் தெரிகிறது.
இந்தோனேஷிய அதிகாரிகளுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளிப்போம் என்று சென்னையைத்தலைமையிடமாகக் கொண்ட "போலாரிஸ்" நிறுவனத்தின் துணைத் தலைவரான ரகுராமன் பாலகிருஷ்ணன்கூறினார்.
-->
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications