கோவையில் 5 வயது பெண் குழந்தையை "சூறையாடிய" என்ஜினியர் கைது
கோயம்புத்தூர்:
5 வயதே ஆன பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சிவில் என்ஜினியரை கோயம்புத்தூர் போலீசார்கைது செய்தனர்.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பெண் குழந்தையைப் பார்த்த 43 வயதான சிவில் என்ஜினியர்மிருகமாகிப் போனான்.
அந்தக் குழந்தையைத் தன் வீட்டுக்குள் தூக்கிச் சென்ற அவன், கொடூரமான முறையில் அவளைக் கதறக் கதறபாலியல் பலாத்காரம் செய்தான்.
பின்னர் மீண்டும் அந்தக் குழந்தையைத் தெருவிலேயே வந்து விட்டுவிட்டுப் போய்விட்டான்.
நடுத் தெருவில் ரத்தம் சொட்டச் சொட்ட நின்று அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பதறிப் போய் விசாரித்தபோதுதான் இந்தக் கொடிய சம்பவம் தெரிய வந்தது.
உடனே அந்தக் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவத்தால் அவளுடைய பெற்றோர் மிகவும் அதிர்ந்து போயுள்ளனர்.
கொடூரமான முறையில் அந்தக் குழந்தையைப் பலாத்காரம் செய்த என்ஜினியரையும் போலீசார் கைது செய்தனர்.
-->


