For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: அரசு பஸ் எரிந்தது- பொதுமக்கள் பீதி

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூரில் அரசுப் போக்குவரத்து பணிமனையில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் ஒரு பஸ்தீப்பிடித்து எரிந்தது.

கோயம்புத்தூர்-அவினாசி சாலையில் உள்ள ஒரு மேம்பாலத்தின் கீழ் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச்சொந்தமான பணிமனை உள்ளது.

இன்று காலை சுமார் 9 மணிக்கு பாலத்தின் மேலிருந்து ஒரு கும்பல் திடீரென்று ஒரு பெட்ரோல் குண்டுகளைபஸ்களின் மீது சராமாரியாக வீசி விட்டு ஓடிவிட்டது.

இச்சம்பவத்தில் ஒரு பஸ்சின் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக நீரைஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் பீதி:

இதற்கிடையே ஒரு டெலிபோன் பூத் அருகே அநாதையாகக் கிடந்த பைக்குள் டைம்-பாம் போன்ற ஒரு பொருள்கிடந்ததும் கோயம்புத்தூர் மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியது.

போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்று அந்தப் பையைச் சோதித்ததில், அதில் ஒரு சிறியகடிகாரம் வயர்கள் இணைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அந்த வயர்களைத் துண்டித்த வெடிகுண்டு நிபுணர்கள்அதற்குள் வெடிகுண்டு உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கும், பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலகத்திற்கும் கூட இன்று பிற்பகலில்தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவை புரளி என்று தெரிய வந்தது.

அடுத்தடுத்து நடந்த இந்தத் தொடர் சம்பவங்களால் கோயம்புத்தூர் நகர மக்கள் கடும் பீதியில் உள்ளனர். கடந்த1998ம் ஆண்டு நடந்த தொடர் வெடிகுண்டு விபத்துக்கள்தான் அனைவரின் கண் முன்பாக நிழலாடிக்கொண்டுள்ளன.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து நகர் முழுவதும் போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

"என் மனைவிக்கு பாதுகாப்பு கொடுங்கள்"

இதற்கிடையே சிறைக்குத் தன்னைப் பார்க்க வரும் மனைவிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றுகுண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்துல் நாசர் மதானி நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வழக்கு தொடர்பாக இன்று கோயம்புத்தூர் தனி நீதிமன்றத்தில் மதானி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுதான்நீதிபதி சிவகுமாரிடம் மதானி இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

சமீபத்தில் மதானியைப் பார்ப்பதற்காக கோயம்புத்தூர் சிறைக்கு வந்திருந்த அவருடைய மனைவி சுபையா,போலீசார் தன்னைத் தாக்கியதாகவும் தங்கள் ஐந்து வயது மகனைப் பிடித்து கீழே தள்ளியதாகவும் புகார்கூறியிருந்தார்.

ஆனால் சுபையா சட்டவிரோதமாக செல்போன்களை வைத்திருந்ததாகவும் அவற்றைப் பறிமுதல்செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில்தான் மதானி இன்று நீதிபதியிடம், தன்னைப் பார்க்க சிறைக்கு வரும் தன் மனைவிக்குப் பாதுகாப்புஅளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக சிறை அதிகாரியிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்யுமாறு மதானியிடம் நீதிபதி கூறினார்.

மாநகராட்சி கூட்டத்தில் அமளி:

இதற்கிடையே கோயம்புத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.

கோயம்புத்தூரில் பால் பூத்துகள் அமைப்பதில் ஆளும் அதிமுகவினர் பெரும் முறைகேடுகள் செய்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையானவார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

இதனால் மாநகராட்சிக் கூட்டத்தில் பெரும் அமளி நிலவியது. கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர் வெளியே வந்து கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X