நாளை புத்தாண்டு: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி:
புத்தாண்டையொட்டி திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்புஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதமாகவே திருப்பதி கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.திருமலையிலும், திருப்பதியிலும் உள்ள லாட்ஜுகளும் நிரம்பி வழிகின்றன.
வரும் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனத்திற்காக குறைந்தது இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியசூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் வரை காத்திருக்க இயலாத பக்தர்கள் கோவிலுக்கு வெளியிலேயே கற்பூரத்தை ஏற்றி வழிபட்டுசென்று கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறப்பதையொட்டி திருப்பதிக்கு வந்து சேரும் பக்தர்களின் எண்ணிக்கைகணிசமாக உயர்ந்துள்ளது.
பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து கொண்டே இருக்கின்றனர். இதனால்திருப்பதியிலும், திருமலையிலும் 24 மணி நேரமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் "கோவிந்தா, கோஓஓஓஓஓஓவிந்தா" என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்துகொண்டிருக்கின்றன.
பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பும்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் போலீசார் இடைவிடாது கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-->


