திமுகவிலிருந்து 2 முக்கிய நிர்வாகிகள் திடீர் டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவின் தலைமைக் கழகச் செயலாளரான மிசா கணேசன் மற்றும் தொண்டர் அணித் துணைச் செயலாளர்நாஞ்சில் கென்னடி ஆகியோர் கட்சியிலிருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியின் நிர்வாக விஷயத்தில் மிசா கணேசனும், நாஞ்சில் கென்னடியும்தலையிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக தலைமைக்குப் புகார் வந்ததைத் தொடர்ந்து அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க கட்சித்தலைமை உத்தரவிட்டது.
கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியதால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்துப்பொறுப்புகளிலிருந்தும் மிசா கணேசன் மற்றும் நாஞ்சில் கென்னடி ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications