"தாதா போல் செயல்படுகிறார்: எஸ்.பி. சின்னத் தேவாரம் மீது புகார்
சென்னை:
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பி. பொன் மாணிக்கவேல் தாதா போல் செயல்படுவதாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் புகார் செய்துள்ளனர்.
அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் அளவுக்கு அதிரடியான காவல்துறை அதிகாரி என்று பெயர் பெற்றுள்ளவர்பொன். மாணிக்கவேல்.
பல ரவுடிகளை அதிரடியாக கைது செய்துள்ளார். சில ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர்.இதனால் ரவுடிகள், கள்ளச் சாராய வியாபாரிகள், வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆகியோர் இவருடைய அதிரடிநடவடிக்கைகளால் கதிகலங்கிப் போயுள்ளனர்.
செங்கை கிழக்கு எஸ்.பியாகப் பதவியேற்ற நாளிலிருந்தே பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறார்பொன்.மாணிக்கவேல். போலீசார் மத்தியில் இவருக்கு "சின்ன தேவாரம்" என்ற செல்லப் பெயரும் உண்டு.
ஆனால், அதிமுகவினரை அரவணைத்துச் செல்வதில் கெட்டிக்காரரான பொன்.மாணிக்கவேல் மீது ஜாதிரீதியில்செயல்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்என்பதால் அதிகாரிகளைக் கூட மதிக்காமல் ஜாதிரீதியில் தனது பலத்தைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் 2 போலீசாரை அவர்களது வீட்டுக்குச் சென்று அடித்து, உதைத்து இழுத்துச் சென்றதாகஇவர் மீது பரபரப்பான புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் விடுப்பில் சென்றதாகவும்கூட கூறப்பட்டது.
அதற்குள் மற்றொரு பரபரப்பான புகாரும் அவர் மீது எழுந்துள்ளது. கடந்த மாதம் உமாபதி என்ற வக்கீலின்வீட்டிற்குச் சென்ற பீர்க்கங்கரணை போலீசார், அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து,உதைத்ததாகவும், இதுகுறித்து பொன். மாணிக்கவேலின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது அவர் அதைக்கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரனிடம், உமாபதி புகார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம், இதுதொடர்பாக எழுத்துப் பூர்வமாகபுகார் கொடுத்தார் பிரபாகரன். அந்தப் புகாரை பொது நல மனுவாக ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி வழக்கை விசாரணைக்கு ஏற்றார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய பிரபாகரன், எஸ்.பி. பொன்.மாணிக்கவேல் ஒரு "தாதா" போல் செயல்படுகிறார். செங்கல்பட்டுகிழக்கு மாவட்டத்தில் அடிக்கடி வக்கீல்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அவரிடம்தெரிவித்தால், அதை அவர் கண்டுகொள்வதில்லை என்றார்.
இதுகுறித்து அரசுத் தரப்பு இன்று பிற்பகலுக்குள் விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->


