விண்வெளிக்கு செல்ல இந்தியப் பெண் சுனிதா தேர்வு
டெல்லி:
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான சுனிதா லின் வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்ல தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அவரை அமெரிக்கா அனுப்புகிறது.
கடந்த 1997ல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண்ணான கல்பனா சாவ்லா தான் விண்வெளிக்குச் சென்றமுதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா", கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்பியது,
இந்நிலையில் மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவுக்கு விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பை "நாசா"வழங்கியுள்ளது.
மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள நீதம் என்ற இடத்தைச் சேர்ந்த சுனிதாவுக்குத்தான் அந்த வாய்ப்புகிடைத்துள்ளது.
37 வயதான சுனிதாவின் தந்தை பெயர் தீபக் பாண்டியா, தாய் பெயர் ஊர்சலின் பாண்டியா. கணவர் பெயர்மைக்கேல் வில்லியம்ஸ்.
அமெரிக்கக் கடற்படை அகாடமியில் பி.எஸ். (பிசிகல் சயின்ஸ்) பயின்ற சுனிதா மிகச் சிறந்த போர்விமானியாவார். பின்னர் என்ஜினியரிங் மேனேஜ்மென்ட் படிப்பில் எம்.எஸ். பட்டமும் பெற்றார். சுமார் 30வகையான விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் ஓட்டும் திறமை கொண்டவர்.
2,330 மணி நேரம் கடற்படைக்குச் சொந்தமான போர் விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும்இயக்கியுள்ளார். தனது சாதனைகளுக்காக இருமுறை அமெரிக்க கடற்படை பதக்கங்களை வென்றுள்ளார் சுனிதா.
வளைகுடா போரின்போது ஹெலிகாப்டர் தாக்குதல் படையில் இவர் அங்கம் வகித்தார். மேலும் பல புதிய ராணுவஹெலிகாப்டர்களின் டெஸ்ட் பைலட்டாகவும் இருந்துள்ளார்.
1998ல் யு.எஸ்.எஸ். சைபன் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான்விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "நாசா" இவரைத் தேர்வு செய்தது. விண்வெளிக் கலமான ஸ்பேஸ் சட்டிலைஇயக்கும் பயிற்சிப் பைலட்டாக அங்கு சேர்ந்தார் சுனிதா.
அங்கு மிக பலத்த போட்டிக்கு இடையே விண்வெளிக்குச் செல்ல சுனிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்தஇரண்டு ஆண்டுகளாகவே விண்ணுக்குச் செல்வதற்கான பயிற்சிகளில் சுனிதா ஈடுபட்டுள்ளார்.
நாசாவில் அவர் இப்போது லெப்டினன்ட் கமாண்டர் என்ற பதவியில் உள்ளார். இவர் பிறந்தது 1965ம் ஆண்டுசெப்டம்பர் 9ம் தேதி. பிறந்தது ஓகியோ மாகாணத்தில் உள்ள யுக்லிட் என்ற இடத்தில். படித்தது எல்லாம்மசாசூசெட்சில்.
அமெரிக்க டெஸ்ட் பைலட்களின் சங்கத்திலும், அமெரிக்க ஹெலிகாப்டர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார்.இவரது பொழுதுபோக்கே விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் இயக்குவது தானாம்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications