ஒருவருக்கு ஒரு பதவி: தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்பு
டெல்லி:
ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல்செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சென்னை மேயராகவும் எம்.எல்.ஏவாகவும் இருந்த மு.க. ஸ்டாலினின் ஒரு பதவியைப் பறிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் 4ம்தேதி இந்தச் சட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
இச் சட்டத்தின் மூலம் ஸ்டாலினின் மேயர் பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து உதயகுமார் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அரசின் ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தை ரத்து செய்தது.
அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி விதியை மீறி இரண்டாவது முறையாக ஸ்டாலின் மேயரானதும் செல்லாது எனவும்அறிவித்தது.
இந் நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தது. அதில் இந்தச் சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும்,இறுதித் தீர்ப்பு தரப்படும் முன் முதல் கட்டமாக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்க வேண்டும் எனவும்தமிழக அரசு கோரியிருந்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது. நீதிபதிகள் லோத்தி, அசோக் பான்,லட்சுமணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
தமிழக அரசின் அப்பீல் மனுவுக்கு பதில் தருமாறு வழக்கறிஞர் உதயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள்,உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக் காலத் தடை ஏதும் விதிக்க மறுத்துவிட்டனர்.
தனது மேயர் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்தும், அதை உயர் நீதிமன்றம் ஆமோதித்தை எதிர்த்தும் ஸ்டாலினும் உச்சநீதிமன்றத்தில் தனியே ஒரு வழக்குப் போட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையும் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.
-->


