டாக்டர் வீட்டில் நூதனமாய் கொள்ளையடித்த கும்பல்
சென்னை:
சென்னையில் டாக்டர் வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் ரூ. 1 லட்சம் பெறுமானமுள்ள நகை, பணத்தைக்கொள்ளையடித்துச் சென்றனர்.
மகாலிங்கபுரம் காம்தார் நகரில் வசித்து வருபவர் டாக்டர் ராமசுப்ரமணியன். இவரது மனைவியும் டாக்டர்தான்.இவர்களது வீட்டுக்கு அருகிலேயே கிளினிக்கும் உள்ளது.
0டாக்டர் ராமசுப்ரமணியத்தின் குடும்பத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் பீரோ போன்றவை வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கதவுகளைபெயர்த்தெடுத்து உள்ளே சில மர்ம மனிதர்கள் நுழைந்தனர்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, அறைக் கதவை உள்பக்கமாகபூட்டினர். பின்னர் ஜன்னலை பழையபடியே வைத்து மூடிவிட்டு தப்பினர்.
காலையில் எழுந்த ராமசுப்ரமணியம் குடும்பத்தினர், பீரோ வைக்கப்பட்டிருந்த அறைக் கதவு உள்பக்கமாகபூட்டப்பட்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டனர்.
உடனடியாக வெளியே வந்து பார்த்தபோது, ஜன்னல் பெயர்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்துஉள்ளே சென்று பார்த்தபோது தான் கொள்ளை போனது குறித்தே தெரிய வந்தது.
-->


