பிளஸ் டூ தேர்வு தேதிகள் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ள பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில், சில தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மாற்றம்செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரான சி. பழனிவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

பிளஸ் டூ தேர்வுக்கான கால அட்டவணை கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது.

ஆனால் சில தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளன:

அக்கவுண்டன்சி, சித்தா - மார்ச் 12 (பழைய தேதி மார்ச் 7)
அரசியல் அறிவியல் - மார்ச் 7 (பழைய தேதி மார்ச் 11)
சிறப்பு மொழிப் பாடங்கள், அடிப்படை அறிவியல் - மார்ச் 11 (பழைய தேதி மார்ச் 12)
பொருளியல் - மார்ச் 19 (பழைய தேதி மார்ச் 18)
புவியியல் - மார்ச் 18 (பழைய தேதி மார்ச் 19)
சமூகவியல், ஆயுர்வேதம் - மார்ச் 24 (பழைய தேதி மார்ச் 22)
வணிகவியல் - மார்ச் 22 (பழைய தேதி மார்ச் 24)

மேற்கண்ட பாடங்களின் தேதிகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக்,ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் நடைபெறும் தேதிகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அந்தச் செய்திக்குறிப்பில் பழனிவேலு குறிப்பிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட பிளஸ் டூ கால அட்டவணை:

மார்ச் 3 - மொழிப்பாடம் முதல் தாள்
மார்ச் 4 - மொழிப்பாடம் 2ம் தாள்
மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 6 - ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 7 - அரசியல் அறிவியல்
மார்ச் 8 - ஹோம் சயின்ஸ், பொது மற்றும் தொழில் கல்விப் பாடங்கள் (தட்டச்சு, ஆபீஸ் செக்ரட்டரிஷிப்(பிராக்டிகல்-1), பிசினஸ் மெஷின்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் புரோகிராமிங் (பிராக்டிகல்-1)
மார்ச் 10 - இயற்பியல், வரலாறு
மார்ச் 11 - சிறப்பு மொழிப்பாடம், அடிப்படை அறிவியல்
மார்ச் 12 - அக்கவுண்டன்சி, சித்தா
மார்ச் 13 - வேதியியல், நுண்கலை, லாஜிக்
மார்ச் 15 - சைக்காலஜி, ஆபீஸ் செக்ரட்டரிஷிப் (பிராக்டிகல்-2), சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்)
மார்ச் 17 - உயிரியல், தாவரவியல், தொழில் கணிதம், சுற்றுச் சூழலியல்
மார்ச் 18 - புவியியல்
மார்ச் 19 - பொருளியல்
மார்ச் 20 - கணிதம், விலங்கியல்
மார்ச் 21 - புள்ளியல், இந்தியக் கலாச்சாரம்
மார்ச் 22 - வணிகவியல்
மார்ச் 24 - சமூகவியல், ஆயுர்வேதம்
மார்ச் 25 - தத்துவம், தொழில் பிரிவின் கீழ் அனைத்து தொழில்பயிற்சிப் படிப்புகள் மற்றும் பொதுப் பிரிவின் கீழ்தொழில் படிப்புகளின் தியரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ஆபிஸ் மேனேஜ்மென்ட், எலெக்ட்ரிக்கல்டொமெஸ்டிக் அப்ளையன்சஸ், எலெக்ட்ரிக்கல் மோட்டார் ரிவைண்டிங், ஜெனரல் மெஷினிஸ்ட், ரேடியோ-டி.வி.பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு, பேங்க்கிங், ஜெனரல் இன்ஸூரன்ஸ்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+