வீரப்பன்: கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் அடி மேல் அடி
டெல்லி:
வீரப்பனுக்கு உதவியதாக தடா சட்டத்தின் கீழ் கைது செயயப்பட்டு மைசூரில் சிறையில் தவித்து வந்த 117 தமிழர்கள் விடுவிக்கப்பட்டதைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
அதே போல கர்நாடக காவல்துறை அதிகாரி ஹரி கிருஷ்ணாவைக் கொல்ல வீரப்பனுக்கு உதவிய 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி கர்நாடகம் தாக்கல் செய்த மனுவையும உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கர்நாடக அதிரடிப்படையினரால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்மீது ஆண்டுக்கணக்கில் விசாரணையே நடக்கவில்லை.
மிகத் தாமதமாகத் தான் மைசூர் தடா நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரை தடாநீதிமன்றம் விடுவித்தது.
ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்துவிட்டு வந்த அந்த அப்பாவிகள் வெளியே வந்தபோது அவர்களின் பல பேரின் குடும்பங்கள்காணாமல் போயிருந்தன.
இவர்களை தடா நீதிமன்றம் விடுவித்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் அப்பீல் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதி ராஜேந்திர பாபு தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
தடா நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்து கிட்டத்தட்ட ஓராண்டாகிய பிறகு இப்போது ஏன் அதை எதிர்த்து வழக்குப் போட்டதுகர்நாடகம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனால் அந்த மனுவை ஏற்க முடியாது என்றும் கூறிவிட்டனர்.
அதே போல கர்நாடக போலீஸ் அதிகாரி ஹரி கிருஷ்ணா கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரப்பனுக்கு உதவியதாக 5 பேருக்கு மைசூர்தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதை மரண தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையைஏற்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டனர்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
-->


