லாட்டரிக்கு தடை: அதிர்ச்சியில் உறைந்த 25 லட்சம் குடும்பங்கள்
சென்னை:
லாட்டரிகளுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டதால் அதை நம்பி பிழைப்பு நடத்தி வந்த சுமார் 25 லட்சம் பேரின் குடும்பங்கள் அதிர்ச்சியில்உறைந்து போய் நிற்கின்றன.
பஸ் ஸ்டாண்டுகள், முக்கிய வீதிகள் தவிர பஸ்களிலும், நடை பாதைகளிலும் லாட்டரியை விற்று ஆயிரக்கணக்கானவர்கள் பிழைத்துவந்தனர்.
இந்த லாட்டரியால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்தன.
லாட்டரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் பெரிய முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். ஆனால், அவர்கள் ஏற்கனவேகுவித்துவிட்ட பணமே பல தலைமுறைகளுக்கு வரும்.
ஆனால், லாட்டரிகளை விற்று அதை நம்பி வீடுகளில் அடுப்பெரித்து வந்த குடும்பங்கள் இன்று அதிர்ந்து போய் நிற்கின்றன.பார்வையிழந்தவர்களின் முக்கிய தொழிலாகவே இது தான் இருந்து வந்தது.
தமிழகத்தில் லாட்டரியை விற்று வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் 25 லட்சம் பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களதுகுடும்பத்தையும் சேர்த்தால் குறைந்தபட்சம் 75 லட்சம் பேர் இதை வைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
குடும்பத் தலைவன் லாட்டரிக்கு அடிமையானதால் அழிந்த குடும்பங்களின் எண்ணிக்கையும் இதே அளவு இருக்கும்.
தமிழகத்தில் சுமார் 60,000 லாட்டரிக் கடைகளும் இருந்தன. ஆண்டுதோறும் ரூ. 14,000 கோடிக்கு லாட்டரிகள் விற்கப்பட்டு வந்தன.ஆனால், அரசுக்கு இதனால் வந்த வருவாய் வெறும் ரூ. 56 கோடி தான்.
இந் நிலையில் இந்த திடீர் தடை வந்துள்ளது. பொங்கலை ஒட்டி தமிழக அரசே கூட லாட்டரியை வெளியிட்டது. இப்போது வந்துள்ள தடைஅந்த லாட்டரிக்கும் பொறுந்தும். இதனால் லாட்டரிச் சீட்டுகளை வாங்கியவர்களுக்கு அரசு பணத்தைத் திரும்பித் தரும் என்று தெரிகிறது.
அதே போல மற்ற லாட்டரி நிறுவனங்களும் பணத்தைத் திருப்பித் தர உத்தரவிடப்படும். ஆனால், இது யானை வாயில் போன சோளப்பொறி மாதிரி என்பதால், இவர்கள் பணத்தைத் திருப்பித் தருவது சந்தேகம் தான்.
-->


