பெங்களூர் வள்ளுவர் சிலை: ஜெவுக்கு தமிழ் கவுன்சிலர் கோக்கை
சென்னை:
பெங்களூர் அல்சூர் ஏரி அருகே நிறுவப்பட்டும் சாக்குப்பையால் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிக்குமாறுகர்நாடக அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்த வேண்டும் என்று பெங்களூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் பாரி கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதாகஇருந்தது.
ஆனால் சில கன்னட இனவெறி அமைப்புகள் எதிர்ப்பு தெவித்து வன்முறையில் ஈடுபட்டதால், அப்போதைய பங்காரப்பா தலைமையிலானகாங்கிரஸ் அரசு சிலையைத் திறக்கவிடாமல் செய்தது.
அன்று முல் இன்று வரை சாக்குப் பையால் மூடப்பட்டு கிடக்கிறது வள்ளுவர் சிலை.
வள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிக்குமாறு கர்நாடக அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிர்பந்திக்க வேண்டும் என்றார் பாரி.
வள்ளுவர் தினம்: மதுக் கடைகள் மூடல்
இதற்கிடையே திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ம் தேதியும் மற்றும் வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினமான 19ம் தேதியும்தமிழகத்தில் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக சென்னை மாவட்ட கலெக்டர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர் அப்துல் சலாம்வெளியிட்டுள்ள உத்தரவில் இரண்டு நாட்களும் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும். மீறி திறந்திருப்போர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இதே போல பிற மாவட்ட கலெக்டர்களும் உத்தரவு பிறப்பிக்க உள்ளனர்.
-->


