கேரள, புதுவை முதல்வர்கள் புறக்கணிப்பால் காவிரி ஆணையக் கூட்டம் ரத்து
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வர் ரெங்கசாமி மற்றும் கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் கலந்து கொள்ளமுடியாது என்று அறிவித்து விட்டதால், பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இன்று டெல்லியில் நடக்க இருந்த காவிரிஆணையக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
குறைந்தபட்சம் மூன்று முதல்வர்களாவது கலந்து கொண்டால்தான் காவிரி ஆணையக் கூட்டத்தை நடத்த முடியும்.
ஆனால், சோனியாவை ஜெயலலிதா விமர்சித்து வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 முதல்வர்களும் சேர்ந்துஇக் கூட்டத்தை ஒத்தி வைக்கச் செய்யத் திட்டமிட்டிருப்பதை தட்ஸ்தமிழ்.காம் முதன்முதலில் கூறியது.
அதே போல இன்று கிருஷ்ணா தவிர அந்தோணி மற்றும் ரெங்கசாமி ஆகிய இருவரும் இன்று டெல்லிக்குச்செல்லவில்லை.
கிருஷ்ணா நேற்று காலையே டெல்லி கிளம்பிச் சென்றுவிட்டார். நேற்று மாலை ஜெயலலிதா டெல்லி சென்றார்.தமிழக நிதி அமைச்சர் பொன்னையன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷ் மற்றும் பொதுப்பணித் துறை செயலாளர் குற்றாலிங்கம் ஆகியோர் முன்னதாகவே டெல்லிசென்று விட்டனர்.
அவர்களும் அதிமுக எம்.பிக்களும் ஜெயலலிதாவை டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இக் கூட்டத்தில் கிருஷ்ணாவும் கலந்து கொள்ளாவிட்டால் காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு எதிராக சதி செய்வதாகஅதிமுக குற்றம் சாட்டும் என்பதால் இந்தப் பிரச்சனையில் மிக முக்கியவரான கர்நாடக முதல்வரை கூட்டத்தில்கலந்து கொள்ளுமாறு டெல்லி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுவிட்டது.
தங்களுடன் பவானி ஆற்றுப் பிரச்சனையில் தமிழகம் மோதி வரும் நிலையில் அந்தோணி தனது டெல்லிபயணத்தை தவிர்த்துவிட்டார்.
ஆனால், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி தான் கடைசி நேரத்தில் தன்னால் டெல்லி போக முடியாத சூழ்நிலைஉருவானதைப் போல டிராமா போட்டுள்ளார். ஏற்கனவே அவர் டெல்லி செல்வதில்லை என்ற முடிவில் தான்இருந்தார்.
ஆனாலும் நான் நாளை டெல்லி செல்வேன், காவிரி கூட்டத்தில் பங்கேற்பேன் என்று ரங்கசாமி அறிவித்திருந்தார்.இதனால் காவிரிக் கூட்டம் நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
இந் நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்ட காரணத்தால் தன்னால் டெல்லி வரமுடியவில்லை என முதல்வர் ரங்கசாமி பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் அனுப்பிவிட்டார். இன்று காலை இக் கடிதம்பிரதமர் அலுவலகத்துக்கு பேக்ஸிசில் வந்து சேர்ந்தது.
இன்றே பாண்டிச்சேரியில் உள்ள அரசு ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று அவர் சிகிச்சையும் பெறுவார் என்றும்தெரிகிறது.
இதையடுத்து காவிரி ஆணையக் கூட்டத்தை போதிய கோரம் இல்லாதததால் (குறைந்தபட்சம் 3 முதல்வர்கள்இல்லாததால்) ஒத்தி வைப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பரில் காவிரி ஆணையக் கூட்டம் நடந்தபோது விமான டிக்கெட் எல்லாம் வாங்கிவிட்டு கடைசிநேரத்தில் தனது பயணத்தை உடல் நிலையைக் காரணம் காட்டி ஒத்தி வைத்தார் ஜெயலலிதா. அப்போதுஆண்டனியும் வர முடியாமல் போனதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது கிருஷ்ணாவும் ரங்கசாமியும் போய் டெல்லியில் காத்திருந்து ஏமாற்றமடைந்து ஊர் திரும்பினர்.
இப்போது அதே ஸ்டைலை பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியைவிட்டு நிறைவேற்றி ஜெயலலிதாவுக்கு பதிலடிதந்துள்ளது காங்கிரஸ்.
நேற்று டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்துகொள்த்தான் வந்துள்ளேன். வேறு எதுவும் இப்போது கூற விரும்பவில்லை. நாளை (இன்று) உங்களைச்சந்திக்கிறேன் என்றார். இதனால் இன்று காங்கிரஸ் முதல்வர்களுக்கு எதிராக ஜெயலலிதா ஏதாவதுபேட்டியளிக்கலாம் என்று தெரிகிறது.
சம்பா பயிர்கள் படிப்படியாகக் கருகிக் கொண்டிருப்பதைத் தாங்க முடியாமல் ஏற்கனவே இரண்டு தமிழகவிவசாயிகள் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு இந்த ஆண்டில் கர்நாடகம் 23 டி.எம்.சி. நீரை மிச்சம் வைத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு 6டி.எம்.சி. மட்டுமே தர வேண்டி இருப்பதாக கர்நாடகம் கூறுகிறது. இந்த 6 டி.எம்.சியைக் கூட இப்போதைக்குத் தரமுடியாது என்றும், அதற்குத் தேவையான நீர் தங்களிடம் இல்லை என்றும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாகூறியுள்ளார்.
ஜெயலலிதா, காங்கிரஸ் பாலிடிக்சில் சிக்கி சின்னாபின்னாவாகிக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவி விவசாயிகள்.
-->


