For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவின் பொடா எதிர்ப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பொடா சட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்குஏற்றுக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வைகோவும் அவரது கட்சியைச் சேர்ந்த 8 பேரும்பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இத்தனை காலத்துக்குப் பின் அவர்கள் மீது சமீபத்தில் தான் குற்றப் பத்திரிக்கையே தாக்கல் செய்யப்பட்டது. எந்தவிதமானவிசாரணையும் இல்லாமல் கடந்த 6 மாதங்களாக இவர்கள் சிறையில் உள்ளனர்.

இந் நிலையில் பொடா சட்டத்தில் பேச்சுரிமையைப் பறிக்கும் 21வது பிரிவை எதிர்த்து வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். இதற்கு பா.ஜ.கவில் எதிர்ப்பு தெரிவித்தது. பொடா சட்டத்தை ஆதரித்துவிட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேள்விஎழுப்பியது மத்திய அரசு. ஆனால், அவர்களது எதிர்ப்பை வைகோ புறக்கணித்தார்.

அவரது மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. வைகோவைப் போலவே இச் சட்டத்தை எதிர்த்துபொது உரிமைக்கான மக்கள் அமைப்பு, அகில இந்திய மனித உரிமை மற்றும் நீதி முன்னணி ஆகியவையும் வழக்குத் தாக்கல்செய்திருந்தன.

வைகோ 21வது பிரிவை மட்டும் எதிர்த்துள்ளார். ஆனால், இந்த இரு அமைப்புகளும் பொடா சட்டத்தையே ஒட்டுமொத்தமாகஎதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

இந்த மூன்று வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

நீதிபதிகள் ராஜேந்திர பாபு, நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரணைக்குஏற்றது.வழக்கை ஏற்ற நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு மிக முக்கியமானது. எனவே, இதை மிக விரிவாக விசாரிக்கவேண்டும், வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

குற்றப் பத்திரிக்கை தாக்கல்:

இந் நிலையில் சென்னை பொடா நீதிமன்றம் வைகோவுக்கு இன்று சுமார் 816 பக்கங்கள் கொண்டகுற்றப்பத்திரிக்கையின் நகலை வழங்கியது.

கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்குப் பின்னர், நீதிபதியின் கண்டிப்புக்குப் பிறகு சமீபத்தில் தான் தமிழகபோலீசார் வைகோ மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்த நகல் இன்று வைகோவிடம் தரப்பட்டது. இதற்காக வேலூர் சிறையிலிருந்து இன்று காலை வைகோசென்னை கொண்டுவரப்பட்டார். அதேபோல் மற்ற சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மற்ற எட்டு மதிமுகவினரும்சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஒன்பது பேரும் இன்று காலை பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் குற்றப்பத்திரிக்கையின்நகல்களை நீதிபதி ராஜேந்திரனே வழங்கினார். குற்றப் பத்திரிக்கையில் ஆதாரங்களாக போலீசாரால்சேர்க்கப்பட்டுள்ள இரண்டு ஆடியோ கேசட்டுகள் மற்றும் ஒரு வீடியோ கேசட்டின் காப்பிகளும் வழங்கப்பட்டன.

வைகோ பேட்டி:

பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,

உலகிற்கே உணவை அளித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்குப் பாத்திரத்தில் உணவு வழங்கப் போவதாகதமிழக அரசு அறிவித்துள்ளது வேதனையாக உள்ளது. உணவுக்குப் பதிலாய அரிசி, நெல் அல்லது நிவாரணத்தொகை வழங்க ஏற்பாடு செய்திருக்கலாம்.

ஏழை விவசாயிகளை பாத்திரம் ஏந்த வைத்ததன் மூலம் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்தத் தொடங்கிவிட்டார் ஜெயலலிதா. தமிழர்களின் பண்பாட்டு மற்றும் கலாச்சார உணர்வுகளை அவர் தொடர்ந்து சிதைத்துக்கொண்டு வருகிறார்.

காவிரி ஆணையக் கூட்டங்களை முன்பு சிலமுறை ஜெயலலிதா புறக்கணித்தார். அதேபோலவே கேரள,பாண்டிச்சேரி முதல்வர்கள் கலந்து கொள்ளாமல் அந்தக் கூட்டம் இன்றைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனறார்வைகோ.

பின்னர் அவர் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X