வைகுண்ட ஏகாதசி: வைணவ கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
சென்னை:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை வைணவ கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிகள்நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்து மகிழ்ந்தனர்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஷேத்திரமான ஸ்ரீரங்கத்தில் கடந்த மாதம் 15ம் தேதியே வைகுண்டஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று ஒருசில கோவில்களில் மட்டுமேஇந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் மற்ற அனைத்து கோவில்களிலும் இன்றுதான் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.
சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
நேற்று இரவு முழுவதும் விழித்திருந்து இதற்காகவே காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா,கோவிந்தா..." என்று குரல் கொடுத்துக் கொண்டே சொர்க்க வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்தனர்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் கொண்டுவரப்பட்டார். பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம்செய்தனர்.
தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் ராமசாமி, காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் உள்ளிட்டஅரசியல் தலைவர்களும் பார்த்தசாரதி கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏகாதசியை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.கருவறையிலேயே சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
இதேபோல் மதுரை-தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன பெருமாள் கோவிலிலும் இன்று அதிகாலை சொர்க்க வாசல்திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள மேலும் பல வைணவ திருத்தலங்களிலும் இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பதியில்...
திருப்பதியிலும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசியன்று வெங்கடாஜலபதியை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பதற்காக நாடு முழுவதிலும்இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருப்பதியிலும் திருமலையிலும் நேற்று குவிந்திருந்தனர்.
"கலியுக வைகுண்டம்" என்று அழைக்கப்படும் திருமலையில் இன்று காலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும்,"கோவிந்தா, கோவிந்தா..." என்று விண்ணதிரும் வகையில் கோஷங்கள் எழுப்பியவாறு பக்தர்கள் கோவிலுக்குள்நுழைந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி, தலையில் இருமுடிகளையும் ஏந்திக் கொண்டு வந்திருந்தனர்.
ஏகாதசியை முன்னிட்டு சுவாமி வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. சிறப்புபூஜைகளும் நடத்தப்பட்டன.
பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும்திருப்பதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->


