For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானங்களில் பொங்கல் விருந்து: இந்தியன் ஏர்லைன்ஸ் ஏற்பாடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொங்கல் தினத்தையொட்டி நாளை சென்னையிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் செல்லும் 3,000பயணிகளுக்கு சிறப்பு "பொங்கல் விருந்து" வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல இயக்குநர் கே. சம்பத்குமார் நிருபர்களிடம்கூறுகையில்,

பொங்கல் தினத்தன்று எங்கள் பயணிகள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுக்கு சிறப்பு "பொங்கல் விருந்து" வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

பொங்கல் தினமான 15ம் தேதி (நாளை) சென்னையிலிருந்து கிளம்பும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 18விமானங்களில் பயணம் செய்யும் சுமார் 3,000 பயணிகளுக்கு சிறப்பு "பொங்கல் விருந்து" வழங்கப்படும்.

அன்று காலை உணவாக மிளகுப் பொங்கல், காய்கறி கொத்சு, வெங்காய வடை, தக்காளி சட்னி, குழிப் பணியாரம்,பழங்கள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் பயணிகளுக்கு வழங்கப்படும்.

மதிய மற்றும் இரவு உணவாக மாங்காய் சாதம், ரச வடை, பீன்ஸ் பருப்பு உசிலி, பருப்பு உருண்டைக் குழம்பு,மாங்காய் பச்சடி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, தயிர் சாதம், வாழைக்காய் பொறியல், அப்பளம் மற்றும் சர்க்கரைப்பொங்கல் உள்ளிட்டவை வழங்கப்படும்.

அதேபோல் மாலை டிபனாக தேங்காய்-மாங்காய்-பட்டாணி சுண்டல், கைமுறுக்கு, தட்டை, வாழைக்காய் வறுவல்,பருப்பு போலி, வெண் பொங்கல், தயிர் வடை, தேங்காய்த் துகையல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவைபயணிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் ஒரு சிறிய சுருக்குப் பையில் பொங்கல் பிரசாதமும் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்தப் பையில்கரும்பு, வெற்றிலை, மஞ்சள் மற்றும் பனை வெல்லம் ஆகியவை இருக்கும்.

இவ்வாறு பண்டிகையின்போது பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காகவே ஆண்டுக்கு ரூ.75 லட்சம் செலவுசெய்கிறோம் என்றார் சம்பத்குமார்.

போகி- 222 பேர் மீது வழக்கு:

இதற்கிடையே சென்னையில் இன்று போகிப் பண்டிகை கொண்டாடியபோது, டயர் மற்றும் பிளாஸ்டிக்பொருட்களை எரித்தது தொடர்பாக சுமார் 222 பேர் மீது அம்மாநகர போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

போகியின்போது டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்கக் கூடாது என்று சென்னை மாநகர போலீஸ்துணை கமிஷனர் சைலேந்திர பாபு நேற்றுதான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும்கூட அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை இந்த எச்சரிக்கையையும் மீறி பலர் டயர், பிளாஸ்டிக் பொருட்களையும்கொளுத்தியுள்ளனர். இது தொடர்பாக 222 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே போகி கொளுத்தியதன் காரணமாக இன்று காலை சுமார் 9 மணி வரை சென்னை மாநகரம்முழுவதும் ஒரே புகை மூட்டமாகக் காணப்பட்டது.

பொங்கல் வாழ்த்து:

பொங்கல் திருநாளையொட்டி பல தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

அப்துல் கலாம்:

ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் கடின உழைப்பும், வியர்வையுமே இந்தத் திருநாளை நாம்கொண்டாட வழி செய்துள்ளன. அந்த விவசாயிகளை நினைவு கூர்ந்து பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன்கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார் டாக்டர் கலாம்.

வாஜ்பாய்:

இந்தத் திருநாள் நாட்டு மக்களிடையே அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தட்டும். அனைவரும் இந்தப்பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துகிறேன் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.

ராமமோகன் ராவ்:

கடந்த ஆண்டு நம் நாட்டின் விவசாயமும் பொருளாதாரமும் பல மோசமான நிலைகளைச் சந்தித்துள்ளன. இந்தஆண்டாவது அந்தப் பிரச்சனைகள் சரியாகி விடும் என்று நம்புவோம். நவீன சாகுபடி முறைகளைக் கையாண்டுஉணவு உற்பத்தி செய்வோம் என்று தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் கூறியுள்ளார்.

இவர்களைத் தவிர தமழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர் இளங்கோவன்ஆகியோர் உள்பட பல தலைவர்களும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X