For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று காணும் பொங்கல்: கண்ணகி சிலை முன் பொங்கலிட்ட பெண்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக இளைஞரணி அலுவலகமான "அன்பகத்தில்" சமீபத்தில் திறக்கப்பட்ட கண்ணகி சிலைக்கு முன்பாக பெண்கள்பொங்கலிட்டு இன்று காணும் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.

சென்னை-மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகியின் சிலை தற்போது அருங்காட்சியத்தில் ஒருமூலையில் யாரும் கவனிக்காத வகையில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள "அன்பகத்தில்" திமுக சார்பில் கண்ணகி சிலை அமைக்கப்பட்டது. கடந்த12ம் தேதி இந்தச் சிலையை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு, கண்ணகியின் சிலை முன்பாக பெண்கள் வந்துபொங்கலிட்டனர். கண்ணகி சிலைக்கு தீபம் காட்டியும் அவர்கள் வழிபட்டனர்.

"ஒவ்வொரு ஆண்டும் மெரினாவில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலைக்கு முன்பாகத்தான் நாங்கள்பொங்கலிடுவோம். ஆனால் தற்போது அது அங்கு இல்லாததால், "அன்பகத்தில்" வைக்கப்பட்டுள்ள கண்ணகி சிலைமுன்பாகப் பொங்கலிட்டுள்ளோம்" என்று சில பெண்கள் நிருபர்களிடம் கூறினர்.

இதற்கிடையே காணும் பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. முக்கியசுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துத்தெரிவித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையின் இறுதி நாளை காணும் பொங்கலாக கொண்டாடுகிறார்கள். குடும்பத்தோடு வெளியில்சென்று நண்பர்களை, உறவினர்களை பார்த்து இனிப்புகள் பரிமாறிக் கொண்டு சந்தோஷப்படுவதே இந்தக்காணும் பொங்கலின் நோக்கம்.

சென்னையில் காணும் பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இன்றைய தினம், சென்னைவாசிகள்குடும்பத்தோடு காலையிலேயே வெளியே கிளம்பி விடுவர். கடற்கரை, பொழுது போக்குமிடங்கள் என சகலஇடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். முக்கியமாக மெரீனா கடற்கரையில் கூட்டம் கட்டுக்கடங்காமல்இருக்கும்.

சென்னைவாசிகள் மட்டுமல்லாது, சென்னையைச் சுற்றிலும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், மாட்டு வண்டிகளில் சென்னைக்குப் படையெடுத்து வருவார்கள்.

இன்று மாலைதான் சென்னை கடற்கரைகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு கூடுவார்கள்.

கடற்கரைக்கு வரும் அவர்கள் கடலில் குளித்து மகிழ்வார்கள். ஆனால் சமீப காலமாக கடலில் குளிக்கும்போதுஏராளமான சாவுகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டு காணும் பொங்கலின்போதுகடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்கரையில் வழக்கமாகக் காணப்படும் குதிரைச் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் ஆணையர் விஜயக்குமாரின் உத்தரவின்பேரில் மெரீனா கடற்கரை, காந்திசிலை, சீரணி அரங்கம், எம்.ஜி.ஆர். சமாதி, எலியட்ஸ் கடற்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 1,000 போலீஸார்நிறுத்தப்பட்டுள்ளனர்.

போலீசார் மட்டுமில்லாமல் கடலோரக் காவல் படையினர், தீயணைப்புப் படையினர், ஊர்க் காவல் படையினர்ஆகியோரும் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனர்.

குதிரைப்படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். கடலில் யாரேனும் மூழ்கி விட்டால்காப்பாற்றுவதற்காக நீச்சல் தெரிந்த சிலரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வசதிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X