For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் இடைத் தேர்தல்: ராமராஜனை தூசி தட்டும் அதிமுக- ஆழமான மெளனத்தில் திமுக

By Staff
Google Oneindia Tamil News

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அங்கு சுவர்களில் விளம்பரம் செய்ய இடம்பிடிப்பதில் கட்சிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

அங்கு போட்டியிடப் போவதாக அதிமுகவும் பா.ஜ.கவும் மட்டுமே அறிவித்துள்ளன. இதனால் இந்த இருகட்சிகளும் சுவர்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன.

திமுக அங்கு போட்டியிடுமா என்று இன்னும் அறிவிக்கவே இல்லை. ஆனாலும் கழக உடன் பிறப்புக்கள்அதிமுகவுக்குப் போட்டியாக சுவர்களை மடக்கிப் போட ஆரம்பித்துவிட்டனர்.

அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக சுவர்களை ரிசர்வ் செய்துள்ள கட்சி திமுக தான்.

இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.எஸ். மணி நாடார் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதிமரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு வரும் பிப்ரவரி 26ம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடக்கிறது.

பெண் வாக்காளர்கள் அதிகம்:

சாத்தான்குளம் தொகுதியில் மொத்தம் 1,53,500 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் பெண் வாக்காளர்களே அதிகம் (81,080 பேர்). ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 72,120 பேர்.

தேர்தலுக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் தங்கள்நிலையையே அறிவிக்கவில்லை. திமுக போட்டிட்டால் ஆதரிப்போம் என பா.ம.க. அறிவித்துவிட்டது.

ஆதி திராவிடர் நலத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தான் சாத்தான்குளம் இடைத் தேர்தல் அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதியில் சுமார் 183 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான பள்ளிகளைத் தேர்வு செய்யும்பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.

கடந்த தேர்தல் நிலவரம்:

கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் 5,766 வாக்குகள் வித்தியாசத்தில்பா.ஜ.க. வேட்பாளரான ராஜா கண்ணனைத் தோற்கடித்தார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மணி நாடார்.

அப்போது காங்கிரஸ், அதிமுக ஆதரவுடனும் பா.ஜ.க., திமுக ஆதரவுடனும் போட்டியிட்டன.

வாக்குகள் விவரம்: மணி நாடார்- 38,308, ராஜா கண்ணன்- 32,542. போட்டியிட்ட மற்ற அனைவருமே டெபாசிட்இழந்தனர்.

யார் யார் போட்டி?:

அதிமுகவும், பா.ஜ.கவும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தாலும் வேட்பாளர் யார்என்று தெரியவில்லை. நாடார்கள் அதிகம் உள்ள இத் தொகுதியில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தான்அனைத்துக் கட்சிகளும் நிறுத்தப் போகின்றன.

அதிமுகவில் ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் ராமராஜனை இங்கு தூசி தட்டி நிறுத்த ஜெயலலிதா முடிவுசெய்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.

பா.ஜ.கவுடன் மோதலில் இருக்கும் திமுக இங்கு போட்டியிடுமா அல்லது போட்டியிட ஆர்வமாக உள்ள காங்கிரசைஆதரித்து புதிய அரசியல் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடுமா என்று தெரியவில்லை. ஆழமான, அதேநேரத்தில் பலவிதமான அரசியல் அர்த்தங்கள் தரும் அமைதியில் உள்ளது திமுக.

தமிழக காங்கிரஸ் கட்சி சாத்தான்குளத்தில் போட்டியிட ஆர்வமாக உள்ளது. ஆனாலும் திமுக நிலைக்காக டெல்லிகாங்கிரஸ் தலைமை காத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் செயல் தலைவரான இளங்கோவன்திமுகவுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் போட்டியிட்டால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தரும்.

இது அதிமுக ஸ்டைல்:

இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் பல சுவர்களை ஆக்கிரமித்துள்ள அதிமுகவினர் சுவர்களில்வேட்பாளர்களின் பெயர்களுக்கான இடத்தை மட்டும் விட்டுவிட்டு, "புரட்சித் தலைவி அம்மா அவர்களின்ஆசிபெற்ற இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர்" என்ற வாசகங்களை எழுதி வைத்துள்ளனர்.

ஓ.பி. தலைமயில் குழு:

சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்காக பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான 9அமைச்சர்கள் கொண்ட அதிமுக தேர்தல் பணிக் குழுவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாநியமித்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இந்தப் பணிக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிக் குழுவின் பொறுப்பாளர்களாக அன்வர் ராஜா, பா. வளர்மதி, சொ. கருப்பசாமி, ஆர். விஸ்வநாதன்,நயினார் நாகேந்திரன், ப. மோகன், எம்.சி. சம்பத், ஏ. மில்லர் ஆகிய அமைச்சர்களும் கேரள மாநில அதிமுகசெயலாளர் கே.பி. ராஜபாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் முகாம்:

இதில் வீட்டு வசதி அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனை அங்கேயே முகாமிட வைத்துள்ளார் ஜெயலலிதா.

தேர்தல் பணியில் அரசு இயந்திரத்தையும் முழுமையாக இறக்கிவிட்டுள்ளார் ராதாகிருஷ்ணன். இதற்கு திமுக உள்ளிட்டஅனைத்துக் கட்சிகளிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனாலும் அரசு அதிகாரிகளையும் தேர்தல் பணியில் மறைமுகமாக ஈடுபடுத்தி வருகிறது அதிமுக.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X